search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 The Film"

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் `100' படத்தின் விமர்சனம். #100TheMovie #Atharvaa #Hansika
    நாயகன் அதர்வா போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது காதலியான ஹன்சிகா டெலிகாலராக வேலை பார்க்கிறார். இதற்காகவே ஹன்சிகாவை கிண்டல் செய்து வருகிறார். 

    அதர்வாவின் நண்பர் மகேஷ் போலீஸ் வேலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ரவுடிகள் மற்றும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கனவோடு பணியில் சேரும் அதர்வாவிற்கு, அவசர உதவி எண்ணான 100-க்கு வரும் அழைப்புகளை எடுக்கும் டெலிகாலராக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.



    தொலைப்பேசியில் அவசர உதவிக்கு அழைப்பவர்களை காவல் நிலையத்திற்கு மாற்றாமல், தானே நேரில் சென்று உதவி செய்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், இறந்ததாக கருதப்படும் அதர்வாவிற்கு தெரிந்த பெண் ஒருவர் 100 நம்பரை அழைக்கிறார். அவருடன் பேசும் அதர்வா அதிர்ச்சியடைகிறார். மேலும் அந்த பெண் தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

    இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதை அறியும் அதர்வா, தன்னுடைய நண்பன் மகேஷ் இதில் ஈடுபட்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறார். 

    இறுதியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா? நண்பன் மகேஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவிற்கு அதிகமாக வேலை இல்லை. பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார்.

    நண்பராக வரும் மகேஷ் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.



    போலீஸ் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். அவசர எண்ணான 100 பற்றியும், அதன் பின் செயல்படுபவர்களை பற்றியும் விளக்கி இருக்கிறார் இயக்குனர். அதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

    த்ரில் காட்சிகளுக்கு ஏற்றவாறு வரும் சாம் சி.எஸ்-ன் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘100’ அவசரம். #100TheMovie #Atharvaa #Hansika #YogiBabu

    சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


    100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார். 

    ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `100' படத்தின் முன்னோட்டம். #100TheFilm #Atharvaa #Hansika
    ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `100'.

    இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு - ரூபன், கலை - உமேஷ் ஜே.குமார், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன் & அனுஷ்யா ஸ்வாமி, பாடல்கள் - விவேக், ஒலி வடிவமைப்பு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர், ஆடை வடிவமைப்பு - சாரா விஜயகுமார், தயாரிப்பு - காவியா வேணுகோபால், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன்.



    100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரம், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது.

    இந்த படம் மூலம் தான் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நடிகை ஹன்சிகா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். #100TheFilm #Atharvaa #Hansika

    100 படத்தின் டீசர்:

    ×