search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "SS Thaman"

  சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா - மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja
  `கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அடுத்ததாக படங்கள் வெளிவரவில்லை. கடந்த மார்ச் மாதம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால், சாயிஷாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

  இதுதவிர சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ மற்றும் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

  இதில் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


  மகாமுனி படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

  அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja 

  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வித்தியாசமாக `அருவம்' என தலைப்பு வைத்துள்ளனர். #Aruvam #Siddharth
  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

  படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது,

  அருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும் என்றார்.

  கபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Aruvam #Siddharth 

  ‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று துவங்கியது. #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar
  ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘மகாமுனி’.

  ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

  மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், க்ரைம் திரில்லர் பாணியில் ‘மகாமுனி’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


  அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.

  இந்த படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர்கள் எம்.ராஜேஷ், சந்தோஷ் பி.ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2டி என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சக்திவேலன்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar

  ×