BGM-ஏ பிடிக்கல.. டிஎஸ்பி-ஐ கழட்டிவிட்டு தமன்-ஐ தட்டித்தூக்கிய புஷ்பா 2 படக்குழு..?

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது.புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
BGM-ஏ பிடிக்கல.. டிஎஸ்பி-ஐ கழட்டிவிட்டு தமன்-ஐ தட்டித்தூக்கிய புஷ்பா 2 படக்குழு..?
Published on

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்தை குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த பின்னணி இசை தயாரிப்பு நிறுவனம் மற்றும் அல்லு அர்ஜூன் நினைத்தது போல அமயவில்லை என படத்தின் பின்னணி இசையை தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான எஸ்.எஸ் தமன் அவர்களிடம் இசையமைக்க கேட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமன் தான் புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக கூறினார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. திரைப்படம் வெளியாக இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் பின்னணி இசை மாற்றப்படுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com