search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Catherine Tresa"

  நீயா 2 படத்தில் ஜெய்க்காக ராய் லட்சுமியும், கேத்தரின் தெரேசாவும் போட்டி போட்டு காதலித்திருக்கிறார்கள். #Neeya2 #jai #RaaiLaxmi #CatherineTresa
  சர்வாவும் மலரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாயிருக்கிறாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள். அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்கு செல்கிறாள். 

  அவன் இல்லாத அந்த ரூமையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர, மலர் ஒழிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள... மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி ஒரு காட்சியில், சர்வாவாக ஜெய், காதலி மலராக ராய்லட்சுமி, மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது.   இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார். அதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைத்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல், காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா? அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா? இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரேசா ஜெயித்தாரா?  இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா 2. ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இப்படம் மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
  எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி. கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் `நீயா 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லட்சுமி ராயால் ஜெய் சங்கடத்திற்குள்ளானார். #Neeya2 #Jai
  கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. 

  படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இயக்குநர் எல்.சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

  பொதுவாக பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகர் ஜெய் நீயா 2 படத்திற்காக பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது, 
  தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். முடிவில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெய் மற்றும் ராய் லட்சுமி இணைந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது ராய் லட்சுமி போட்டிருந்து காலணியின் ஹீல்ஸ் மிக உயராக இருந்ததால், நாயகியுடன் சிரமப்பட்டுக் கொண்டு ஜெய் நின்றுள்ளார்.  படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Neeya2 #Jai #RaaiLaxmi

  சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
  சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

  இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


  ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் இன்று வெளியாகிறது. லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV#MeghaAkash #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #VRVFromFeb1st 

  `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் ரெட்கார்டு பாடல் மூலம். சினிமாவில் சிம்புவுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்ட சர்ச்சைக்கு சிம்பு பதில் அளித்துள்ளார். #VanthaRajavathaanVaruven #STR
  சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து இருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யாகிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரெட்கார்டு எனத் தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுத, சிம்பு பாடியுள்ளார்.  ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், சிம்புவுக்கு நடிக்க ‘ரெட் கார்டு’ (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, இந்த பாடலின் வரிகள் எழுதப்பட்டு இருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. #VanthaRajavathaanVaruven #STR #VRV #RedCardu #MeghaAkash

  சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் முன்னோட்டம். #VanthaRajavathaanVaruven #STR
  லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.

  சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் - பிருந்தா, சதீஷ்,  கலை இயக்குநர் - குருராஜ், தயாரிப்பாளர் - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை - திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் - சுந்தர்.சி.

  தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

  படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

  வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்:

  சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
  `செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

  தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வித்தியாசமாக `அருவம்' என தலைப்பு வைத்துள்ளனர். #Aruvam #Siddharth
  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

  படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது,

  அருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும் என்றார்.

  கபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Aruvam #Siddharth 

  2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
  பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கின்றன. பேட்ட படத்துக்கு இசை வெளியீடு முடிந்து விளம்பரப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீசரோ வெளியிடப்படவில்லை. இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

  ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் முடியவில்லை. அத்துடன் ரஜினி, அஜித் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகி இருக்கிறது. 

  சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.   இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது ‘பொங்கல் வெளியீடு’ என குறிப்பிட்டார்கள். ஆனால் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீசரில் விரைவில் வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. #STR #VanthaRajavathanVaruven

  நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு பாடல் மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
  நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.

  இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின.

  நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.

  தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது.

  தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் டிரைலர் ரஜினியின் 2.0 வோடு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.  விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

  இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன.

  இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது. இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. #STR #Simbu #VanthaRajavathaanVaruven

  சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை ரஜினிகாந்தின் 2.0 படத்துடன் இணைக்க லைகா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
  `செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. 

  இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

  சமீபத்தில் படத்தின் டீசருக்கு சிம்பு டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் டீசர் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில் படத்தின் டீசர் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி உலகமெங்கம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரை இணைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR