என் மலர்

  நீங்கள் தேடியது "Kabir Duhan Singh"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `யோகி டா' படத்திற்கு `லூசிபர்' பட பிரபலம் தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். #YogiDa #Dhansika
  தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தில் தன்ஷிகாவுடன் கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது.

  ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `லூசிபர்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  கவுதம் கிருஷ்ணா - ஹிமேஷ் பாலா இணைந்து இந்த படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர். #YogiDa #Dhansika #DeepakDev

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வித்தியாசமாக `அருவம்' என தலைப்பு வைத்துள்ளனர். #Aruvam #Siddharth
  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

  படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது,

  அருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும் என்றார்.

  கபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Aruvam #Siddharth 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படம் குறித்து பரவி வந்த வதந்திக்கு, அஜித்தின் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விளக்கம் அளித்துள்ளார். #Viswasam #AjithKumar
  அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  ஐதராபாத்தில் அரங்கு அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் நடக்கும் கதை என்றும், பிளாஷ்பேக்கில் ஒரு அஜித்குமார் வட சென்னை தாதாவாக வருவதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனினும் படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.   சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேநேரத்தில் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விஸ்வாசம் படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. 

  இந்த நிலையில், தான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை என்றும், காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தில் தான் நடித்து வருவதாக கபிர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Viswasam #AjithKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் வேதாளம் படத்தில் நடிக்க அஜித்துக்கு வில்லனாக நடித்த கபிர் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Siddharth #KabirDuhanSingh
  `சைத்தான் கா பச்சா' படத்தை தொடர்ந்து சித்தார்த் அடுத்ததாக புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை 13-ஆம் தேதி துவங்குகிறது. 

  இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசாவும், முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கின்றனர். இந்த படத்தில் சித்தார்த்துக்கு வில்லனாக வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர் விஜய் சேதுபதியின் றெக்க படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Siddharth #KabirDuhanSingh

  ×