என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makkal neethi maiam"

    • சந்திரசேகர் இப்போது தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்டு நிற்பதை தி.மு.க.-வினரே விரும்பவில்லையாம்.
    • தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளையையும் சந்திரசேகரே கவனித்துக்கொண்டாராம்.

    மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்-ஆக உள்ளபெயர் சந்திரசேகர். இவர் வேறு யாருமில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராக இருந்தார். சில காலங்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக, மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் செலவுகளை மொத்தமாக, தான் பார்த்துக்கொள்வதாக கமலிடம் உறுதி அளித்துள்ள சந்திரசேகர், தற்போது கமலின் நிழலாகவே மாறிப்போயிருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.

    யார் இந்த சந்திரசேகர்?

    அனிதா டெக்ஸ் காட் என்ற திருப்பூரை மையமாக கொண்ட நிறுவனத்தின் அதிபர்தான் இந்த சந்திரசேகர். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இவரது நிறுவனத்தில் இருந்து துணிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சப்ளை ஆகிறது.

    அ.தி.மு.க.- தி.மு.க.-விற்கு நெருக்கம் - எப்படி?

    கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய அளவில் டெண்டர் எடுத்து பணிகளை எடுத்துச் செய்தவர் சந்திரசேகர். அதற்காக, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரை பலமாகவே கவனித்ததாகக் கூறப்படுகிறது.

     அதுமட்டுமின்றி, இன்று தி.மு.க. ஆட்சியில் கோலோச்சிக்கொண்டிருக்கும் அதிகாரிகளில் முக்கியமானவருடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளையையும் சந்திரசேகரே கவனித்துக்கொண்டாராம். ஆனால், அதுதான் இன்று வரை தி.மு.க. ஆட்சிக்கு மிக முக்கிய அவப்பெயராக இருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.

    சந்திரசேகர் சப்ளை செய்த பொருட்களில் வெல்லம், நெய் உள்ளிட்ட எதுவும் தரமில்லாமல் இருந்ததால், இவரது நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க பரிந்துரை செய்தும் அது நடக்காமல் போனதாம். அந்த அளவுக்கு செல்வாக்காக பவனி வருகிறார் சந்திரசேகர் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

    பா.ஜ.க.-வினரோடு சந்திரசேகரின் பந்தம்!

    தமிழ்நாட்டைத் தாண்டி தன்னுடைய தொழில் வீறுநடை போட வேண்டும் என்பதால் தமிழக பா.ஜ.க.-வின் முக்கிய நிர்வாகிகள் பலருடன் இவர் மிக நெருக்கமாக இருந்ததுடன், அவர்களையும் கணக்கே பார்க்காமல் சந்திரசேகர் கவனித்தது தனி வரலாறு.

    கமலிற்காக காசு வாங்கிய சந்திரசேகர்?

    கடந்த 2021 தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை தடுக்கும் விதமாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து 200C-க்கு மேல் சந்திரசேகர் பணம் பெற்று கமலை தனியாக போட்டியிட வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றி பெற்றார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    பெற்ற பணத்தை பிரித்து முக்கியவானர்களுக்கு செட்டில் செய்ததாகவும் மீதியை திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்ட நிலையில், அப்போதே அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது யாவரும் அறிந்ததே. 

    இப்போதும் கூட்டு, தி.மு.க.-விற்கு வேட்டு?

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-விடம் பணம் பெற்று கமலை தனியாக நிற்க வைத்து தி.மு.க.-விற்கு நெருக்கடி கொடுக்க வைத்த சந்திரசேகர் இப்போது தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்டு நிற்பதை தி.மு.க.-வினரே விரும்பவில்லையாம்.

    நம்மிடம் சீட் வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்லாக சந்திரசேகர் இருப்பார் என்பதால் அவரை கமல் ஒதுக்கி வைத்தால்தான் மற்ற நிர்வாகிகள் மீது தி.மு.க.-வினருக்கு நம்பிக்கை வரும் என்ற பேச்சு எழுந்துள்ளதாம் அறிவாலயத்தில்.

    இப்போதும் கூட அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்து அதற்காக பணியாற்றுவதாகவும் அதற்கு தேவையான இனிப்பு பெட்டிகளை இப்போதே சந்திரசேகர் தயார் செய்துக்கொண்டிருப்பதாகவும் அங்கலாய்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் அரசல், புரசலாக.

    தன்னுடைய தொழிலை விரிவுப்படுத்த தி.மு.க.-வை விட அ.தி.மு.க. ஆட்சியே சரியாக இருக்கும் என்று சந்திரசேகர் கருதுவதாகவும், எனவே அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் கிசுகிசுக்கிறார்கள் மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில்.

    • கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
    • கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரோமோஷன் விழாவில் கமல் பேசும்போது "தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்" எனக் குறிப்பிட்டார்.

    இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்தார்.

    அப்போது அவர்," கமல் கூறிய கருத்தில் தவறில்லை" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ் குறித்த கமல் கருத்தில் எந்த தவறும் இல்லை. தமிழில் இருந்து பிறந்ததுதான் சமஸ்கிருதம்.

    அதை 24,000 பேர்தான் பேசுகின்றனர். கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
    • தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.

    இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

    கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.

    அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

    அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.

    ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.

    சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
    • பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.

    இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.

    அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.

    இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.

    பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சமூக ஆர்வலரை லாரி ஏற்றிக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.
    • கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரி கும்பலால் அவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 


    இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கை வளங்களைச் சூறையாடுதல், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.

    கரூர், கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனுமதி இல்லாமலும்,அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்தி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுவதாக சேரன் வேதனை தெரிவித்துள்ளார். #Cheran
    பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.


    மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள். தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள் தானே.”

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Cheran #KamalHaasan #Seeman #MakkalNeethiMaiam #NaamThamizharKatchi

    ‘இந்தியன்-2’ படம் தான் எனது திரையுலகப் பயணத்தின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiam
    தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கமல்ஹாசன் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்தை நிரப்பும் வகையில், தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாக கமல்ஹாசன் கடந்த ஆண்டு அறிவித்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் அவர் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அன்றே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். 6 தென் மாநிலங்களைக் குறிக்கும் வகையில் 6 கைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த காட்சியுடன் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அவர் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டார். மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதையும் அவர் வழக்கத்தில் வைத்துள்ளார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்ட போது தனது கட்சியினருடன் கமல்ஹாசன் அங்கு சென்று செய்த நிவாரண பணிகள் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது.



    இதற்கிடையே கமல்ஹாசன் ஏராளமான மக்கள் நல அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளார். கேரளாவில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் “டூவண்டி 20 கிழக்கம்பாலம்” எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை - எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஏழைகளிடம் வீடுகளை ஒப்படைத்தார்.

    அந்த கிராமத்து வீடுகளை அவர் சுற்றிப்பார்த்தார். “கடவுளின் கிராமம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஊரில் உள்ள வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தனது எதிர்கால அரசியல் திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேரளா மாநிலம் எனக்கு வீடு போன்றது. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த அருமையான திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த நான் விரும்புகிறேன்.

    அதற்கு உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் அதிகாரம் இல்லாமல் கனவு கண்டால், அந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். எனவே மாற்றம் வேண்டும்.



    மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக மக்களுக்கு உண்மையான தேவைகள் தரப்படும். இதற்காகவே நான் மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன். அவர்கள் ஆளும் மாநிலத்தில், அவர்கள் செய்துள்ள நல்ல திட்டங்களைக் கேட்டு அறிந்து வருகிறேன்.

    கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்துப் பேசியுள்ளேன். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசி உள்ளேன். அவர்களிடம் இருந்து சில நல்ல யோசனைகளை பெற்றுள்ளேன். அவற்றை அப்படியே தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.

    தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.

    நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.

    இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

    எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தி மாசு ஏற்படுத்த முயற்சி செய்யும் அரசியல் கட்சிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்.



    அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் பணம் சாம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆட்சி, அதிகாரம் என்பது மாநில மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்பவர்கள் இல்லை. நாட்டில் நடத்த முடியாததையே அரசியல்வாதிகள் சொல்லி வருகிறார்கள். நடக்கும் காரியங்களை கூறி, அவற்றை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும்.

    அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும். எந்த ஒரு வி‌ஷயத்தையும் செய்ய முடியுமோ, முடியாதோ என்று முதலில் எண்ணத் தோன்றும். ஆனால் நம்மால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும்.

    ஒரு கட்சியின் இலக்கு என்பது நிச்சயமாக அரசியலில் முதன்மைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான். தோல்வியை இலக்காக நினைக்கமாட்டார்கள். தீ என்றும் தீ-தான். அதில் பெரிய தீ, சிறிய தீ என்று ஒன்றும் இல்லை.

    அது பரந்து, பற்றத்தான் செய்யும். எதுவும் முதலில் சிறியதாக இருக்கும். முடிவில் அது பெரிதாக அமைந்துவிடும். அந்த வகையில் மாநில மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் மதச்சார்பற்ற கட்சி ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டும்.



    சபரிமலை விவகாரத்தைப் பொருத்தவரை சாதாரண மக்களிடம் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை உருவாக்க வேண்டும். இதற்கு படை பலத்தை பயன்படுத்தக் கூடாது என்பது எனது கருத்தாகும். மீடூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தப்பட கூடாது.

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

    மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட பிறகு இப்போதுதான் கமல்ஹாசன் முதன் முதலாக தனது எதிர்கால திட்டங்களை வெளியிட்டுள்ளார். சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்ற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. #KamalHaasan #MakkalNeethiMaiam

    80-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரீபிரியா, இயக்குநராக தான் நயன்தாராவை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். #SriPriya #Nayanthara
    ஸ்ரீபிரியா, கமலின் மக்கள் நீதி மய்ய கட்சி பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    நீங்கள் ஓர் இயக்குநராக யாரை வைத்துப் படமெடுக்க விரும்புவீர்கள்?

    நயன்தாரா.

    ரஜினிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம்?

    கமல், எல்லோருடனும் சட்டெனப் பழகிவிடுவார். ரஜினி, ஒருவரைப்பற்றி நன்கு அறிந்த பின்னரே அவரை நண்பராக ஏற்பார். ஆனால், இருவருமே நட்புக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். என்னிடம் முன்னர் பழகிய அதே நட்புடன் அவர்கள் இன்றுவரையிலும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

    சினிமாவுக்கு வரவில்லை என்றால், ஸ்ரீபிரியா என்னவாகியிருப்பார்?

    நான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஒரு வேளை, வழக்கறிஞராகி இருக்கலாம்.

    சமீபத்தில் உங்களை கவர்ந்த நடிகர்கள்?

    விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்ல, இயல்பிலும் இருவரும் அருமையானவர்கள்.



    சமூக வலைதளங்களின் தாக்கம்?

    சாதகம், பாதகம் இரண்டும் உள்ளன. தியேட்டரில் பாதி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதைப் பற்றிய விமர்சனத்தைப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அந்தக் குழுவின் மொத்த உழைப்பையும் தங்களின் நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற விமர்சனத்தால் விரயமாக்குகிறார்கள். ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். #SriPriya #Nayanthara

    தனது மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிடவில்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தற்கு, அவரது மகள் ஸ்ருதியின் பழைய பேட்டி ஒன்றை முன்வைத்து நெட்டிசன்கள் கமலை விமர்சித்து வருகின்றனர். #KamalHaasan #ShrutiHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்து ட்வீட் செய்தார். சாதியை ஒழிக்க என்ன யோசனையை முன்னெடுக்கின்றீர்கள்? என ஒருவர் கேட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்து ட்வீட் செய்த அவர், “எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கான விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுத்தேன். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை எடுத்துச் செல்லாமல் தவிர்க்க இதுவே வழி. அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

    ‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன் என்று கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiam
    ரஜினியும், கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். இருவருக்கிடையேயும் நேரடியாக போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. திரைத்துறையில் நண்பர்களாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரிகளாக மாறியது போல, வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது.

    அதே நேரம் அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை வி‌ஷயத்தில் என் அண்ணனை கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்க தயார்’ என்று கூறினார்.



    கமலின் அண்ணன் சாருஹாசன், கமலால் முதல்வர் ஆக முடியாது என்று காட்டமாக விமர்சிப்பதை பற்றி கேட்டதற்கு, நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? என்று கேட்டார். இப்போது நன்றாக சாப்பிடும் வசதியை ரசிகர்கள் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தலில், அரசியல் செயல்பாடுகளில் மக்கள் நீதி மய்யம் பெறும் வெற்றி தான் அவருக்கு பதிலாக அமையும்’ என்றார். #KamalHaasan #MakkalNeethiMaiam #KamalHaasan

    பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த ஜூலி தற்போது சினிமாவில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Kamalahaasan #Julie
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜுலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பரபரப்பானார். தொடக்கத்தில் ஜுலி மீது இருந்த நல்ல பெயர் எல்லாம் தலைகீழாக மாறியது.

    ஜுலியை வளர்த்த சமூக வலைதளங்களே அவரை காட்டமாக விமர்சிக்கத் தொடங்கியது. டிவி காம்பயரிங், சினிமா என்று அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். திடீரென்று நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோவில் தான் விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு பற்றியெல்லாம் சொல்லிவிட்டு தான் விரைவில் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லி முடிக்கிறார். அவரது உதட்டசைவை வைத்து அது அரசியல் கட்சி தான் என்று அவரை கிண்டலடித்து வருகிறார்கள். நாம் விசாரித்த வகையில் ஜுலிக்கு அரசியல் ஆசை இருக்கிறது.



    ஆனால் தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார். கமல் கட்சியில் சேரத் தான் முயற்சிக்கிறார். இது ஏதோ இயக்கத்துக்கான விளம்பரம் போல உள்ளது என்கிறார்கள். #Kamalahaasan #Julie

    ×