search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal politics"

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடப்பட்ட வழக்கில், இன்று கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை  கிளையில் கமல்ஹாசன்  மனு தாக்கல் செய்திருந்தார்.

    அம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.



    அப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    கமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 20ம் தேதி வழங்கப்படும் என கூறி ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, கமலுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.


    கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, தனி நபர் கருத்துக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது என கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தின்போது கோட்சே ஒரு தீவிரவாதி என கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    இதையடுத்து பிரக்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திக் விஜய் சிங் கூறுகையில், 'பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

    இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ‘ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யா தாகூர்,  நளின் கட்டேல் ஆகியோரின் கருத்துகளுக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது. இவை தனி நபரின் கருத்தாகும். பாஜக இதில் எதுவும் செய்ய முடியாது.

    அவர்கள் சொன்ன கருத்துக்கு அவர்களே மன்னிப்பு கேட்டு விட்டார்கள். பாஜக அவர்கள் கருத்துகளை  தீவிரமாக எடுத்துக் கொண்டு, இதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளது. இந்த குழு, மூவரிடமும் அவர்கள் கருத்துகள் தொடர்பாக விளக்கம் கேட்டு 10 நாட்களுக்குள் அறிக்கையை பாஜகவிடம் சமர்ப்பிக்கும்’ என கூறினார்.  
    கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் தனது கடந்த வாரம் அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று குறிப்பிட்டார்.



    பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கமலின்  இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங்  நேற்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராகதான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திக் விஜய் சிங் கூறுகையில், ‘நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என பிரக்யா  புகழ்ந்து கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம் ஆகும். பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

    இந்நிலையில் பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், நேற்று பாஜகவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரக்யா ‘நான் கூறிய கருத்து யாரையாவது பாதித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதையடுத்து, கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளார்.
    போபால்:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங் கூறுகையில், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறியுள்ளார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று முதல் ஆளாக எச்சரித்து கடுமையாக விமர்சித்தார்.

    இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று  புகார் கொடுத்தனர்.

    இந்த புகார் மனுவில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.



    கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை கோரிய முறையீட்டை ஏற்க மதுரை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
    மதுரை:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 
    கோவை,திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    கோவை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

    அன்றே நடந்த முதல் அரசியல் மாநாட்டில், அவர் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். வெள்ளை நிறத்தின் மத்தியில் 6 இணைந்த கைகள் இருப்பது போன்று அவரது கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக தனது கட்சிப் பணிகளை நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக செய்து வருகிறார். முக்கிய பிரச்சினைகள் மீது தனது கருத்தையும் வெளியிட்டு வருகிறார்.

    சமீபத்தில் கட்சியின் உள் கட்டமைப்பை மாற்றி அமைத்த கமல்ஹாசன், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார். தேர்தல்கள் நெருங்குவதால் அடுத்தக்கட்டமாக அவர் மக்களை சந்திக்க தயாராகி வருகிறார்.

    அதன்படி தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற் கொண்ட சுற்றுப் பயணம் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது.

    இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் தனது மக்கள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் 2 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கோவையில் வருகிற 18, 19-ந் தேதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பயிலரங்கம் அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் நடைபெறுகிறது.

     


    இதில் 2-வது நாள் (19-ந்தேதி) பயிலரங்கில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். பயிலரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடி கட்சியின் வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி பேச உள்ளார்.

    அன்று மதியம் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசுகிறார். இதன்பின்னர் பொள்ளாச்சி செல்லும் அவர் அங்கு மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார்.

    பொதுமக்களை சந்தித்து பேசிய பின்னர் பொள்ளாச்சி மின்னல் மகால் மண்டபத்தில் நடைபெறும் அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவு பொள்ளாச்சியில் தங்குகிறார்.

    மறுநாள்(20-ந்தேதி) திருப்பூர் மாவட்டத்தில் அவர் மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார். அன்று திருப்பூர் பொன்னிவாடி, தாராபுரம், காங்கயம், பல்லடம், திருப்பூர் மாநகரில் சின்னான்டி பாளையம், வீரபாண்டி பிரிவு, சி.டி.சி. கார்னர், புதிய பஸ் நிலையம், எஸ்.ஏ.பி. தியேட்டர், பாப்பீஸ் ஓட்டல் அருகில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் உரையாடுகிறார்.

    கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதமே கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுற்றுப் பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது கமல்ஹாசன் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினர் கமல் ஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்ட மிட்டுள்ளனர்.

    சுற்றுப் பயணத்தின் போது பொது மக்கள் பிரச்சினை குறித்து கமல்ஹாசனிடம் எடுத்து கூறவும் திட்டமிட்டு உள்ளனர். கொங்கு மண்டலத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசனின் மக்கள் பயணம் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

    தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்துள்ளார். அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் கவனிக்கும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

    முஷ்டாக் அலி (எ) பாபு- அம்பத்தூர், ஆவடி, எம்.லோகரங்கன்- திருத்தணி, திருவள்ளூர், டி.தேசிங்குராஜன்- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, எஸ்.டி.மோகன்-மாதவரம், திருவொற்றியூர், எம்.அருணாச்சலம்- பூந்தமல்லி, மதுரவாயல்.

    பி.கே.மணிவண்ணன்- ஆலந்தூர், பல்லாவரம், டி. ஆர்.பாலச்சந்திரன்-செங்கல் பட்டு, தாம்பரம், ராமராஜேந்திரன்- செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், ஜி.சத்தியநாராயணன்- காட்பாடி, ஆற்காடு, வேலூர், எஸ்.சிவக்கொழுந்து- ஆம்பூர்.

    பி.ராஜா- கே.வி.குப்பம், குடியாத்தம், ஆர்.சுரேஷ்- அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, எச்.அப்துல்கரீம்- ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, எஸ்.சுரேஷ்-செய்யாறு, வந்தவாசி.

    எம்.நாகராஜன்- செங்கம், கலசப்பாக்கம், ஏ.ரஞ்சித்குமார்- ஆரணி, போளூர், ஆர்.அருள்- திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், பி.பாபு- விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.ஷாஜி- வானூர், திண்டிவனம்.

    ஆர்.ஸ்ரீபதி- செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், கே.கணேஷ்- சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, எஸ். சரவணன்- சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, டி.கே.மூர்த்தி- காட்டுமன்னார்கோவில், புவனகிரி, முகமதுரபீக்- திட்டக்குடி, விருத்தாசலம், டி.வெங்கடேசன்-நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்.

    ஆர்.ராஜா-காரைக்குடி, திருப்பத்தூர் (சிவங்கை மாவட்டம்), எம்.பெரியார் குணாஹாசன்- சிவகங்கை, மானாமதுரை, எம்.ஜி.ஜோதி அய்யப்பன்- ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பி.கணேஷ் குமார்- போடிநாயக்கனூர், கம்பம், ஜெ.காளிதாஸ்- திருச்சுழி, விருதுநகர்.

    எம்.பி.சீனிவாசகம்- சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், வி.ஜெய்சங்கர்- சாத்தூர், ராஜபாளையம், ஜெ.தேவராஜ்-பரமக்குடி, திருவாடானை, ஆர்.சோமநாத்- ராமநாதபுரம், முதுகுளத்தூர், முகம்மது அப்துர் ரஹீம்-ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்.

    ஆர்.சேகர்-ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, வி.ஸ்ரீ கருணாகர ராஜா- தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், எல்.செல்லப்பா- வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், எஸ்.செந்தில் குமார்- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பி.சசி-கன்னியகுமாரி, நாகர்கோவில்.

    எம்.எஸ்.ஜேக்சன்- குளச்சல், கிள்ளியூர், ஜெ.நிர்மல் ஜோசப்- விளவங்கோடு, பத்மநாபுரம்.

    கே.முருகேஷ்-ஊத்தங்கரை, பர்கூர், வி.செல்வ மூர்த்தி- ஓசூர், தளி, ஜெ.சத்யநாராயணா- பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஏ.பாலமுருகன்-பாலக் கோடு, பென்னாகரம், தர்மபுரி, எஸ்.மணி- ராசிபுரம், சேந்தமங்கலம்.

    ஜெ.ஜெயபிரகாஷ்- நாமக்கல், பரமத்திவேலூர், கே.காமராஜ்- திருச்செங்கோடு, குமாரபாளையம், ஏ.சரவணகுமார்- பவானி சாகர், அந்தியூர், எம்.சிவகுமார்-பவானி, கோபிசெட்டி பாளையம், ஆனந்தம் எம்.ராஜேஷ்- ஈரோடு (கிழக்கு), மொடக் குறிச்சி.

    எஸ்.சுரேஷ்பாபு- உதகமண்டலம், கூடலூர், இ.ஷாஜகான்-குன்னூர், எம்.தாமரைக்கண்ணன்- சூலூர், சிங்காநல்லூர், எம்.பரமேஷ்வரன் (எ) தம்புராஜ்- கோவை (வடக்கு), கவுந்தம்பாளையம், மேட்டுப்பாளையம், டி.பிரபு- தொண்டாமுத்தூர், கோவை (தெற்கு), கிணத்துக்கடவு.

    எச்.செந்தாமரைக்கண்ணன்-பொள்ளாச்சி, வால்பாறை, எம்.நம்பிராஜ்- அரவக்குறிச்சி, குளித்தலை, எம்.புகழ்முருகன்- கிருஷ்ணராயபுரம், கரூர், வி.எம்.பிரசாத்குமார்-தாராபுரம், காங்கேயம், பி.வெங்கடேஷ்- பல்லடம், அவிநாசி.

    கே.ஜீவா- திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), ஏ.என்.சந்திரசேகர்- உடுமலைப்பேட்டை, மடத்துக் குளம்.

    எம்.முகமது ஜப்பார்- ஆத்தூர், (திண்டுக்கல்), வேடசந்தூர், இம்மான் ஹசன் (எ) இம்மான் ஜப்பார் சாதிக்- பழனி, ஒட்டன்சத்திரம், ஆர்.எம்.ராஜசேகர்- நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், எப்.பி.ஷாஜ்குமார்- திருவெறும்பூர், லால்குடி.

    ஆர்.சாம்சன்-மணச்சநல்லூர், முசிறி, துறையூர், என்.சுரேஷ் - திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), எஸ். முத்துக்குமார்- பெரம்பலூர், குன்னம், சையது அனஸ் மொகிதின் சாதிக்- நாகப்பட்டினம், கீழவேலூர், வேதாரண்யம், ஜி.ஞானசம்பந்தம்- திருவாரூர், நன்னிலம்.

    கே.அருண் சிதம்பரம்- திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பி.சதாசிவம்- பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஓரத்தநாடு, பி.சுரேஷ்- கந்தவர்வகோட்டை, விராலிமலை, சி.எம்.ஆர்.கமல் சுதாகர்- புதுக்கோட்டை, திருமயம், எஸ்.மூர்த்தி- ஆலங்குடி, அறந்தாங்கி.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

    தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் சுற்றுச்சூழல், வனத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. #TNAssembly #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டசபை மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக எங்கள் சிற்றாய்வு மற்றும் மய்யம் விசில் செயலியின் மூலம் கிடைக்கப்பெறும் கேள்விகள் மற்றும் தகவல்களை ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக அரசு மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பார்வைக்கு மக்கள் நீதி மய்யம் முன்வைக்கும்.

    பொறுப்பான எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை விவாதத்தின்போது இந்த கேள்விகளை எழுப்பி மக்களின் நலனுக்காக கடமை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். 29-ந்தேதி (இன்று) நடைபெற உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கேள்விகள் வருமாறு:-

    * குரங்கணி தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு பின்னர் பொழுதுபோக்குக்காக மலை ஏறுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் கொள்கைகள் இருக்கிறதா?


    * வனப்பகுதிகளில் காட்டுத்தீ போன்ற ஆபத்துகளை உடனடியாக அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் தெர்மல் சென்சார் போன்ற கருவிகள் வனத்துறையால் வாங்கப்பட்டிருக்கிறதா?

    * கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோர பகுதியான தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கும், பல லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் பெரும் சவாலாகவும், ஆபத்தாகவும் மாற உள்ளது என்ற துறைசார்ந்த வல்லுனர்களின் கேள்விகளுக்கு தமிழக அரசின் விளக்கம் என்ன?

    * ஏப்ரல் 6-ந்தேதி வரை இதுகுறித்து கேள்விகள் கேட்கலாம் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில் என்னென்ன கேள்விகள் அரசுக்கு வந்தது? அந்த கேள்விகளுக்கு பதில் என்ன என்பதை தமிழக அரசு சட்டமன்றத்தில் அளிக்கவேண்டும்.

    * வெள்ளத்தினை காரணம் காட்டி கூவம் மற்றும் அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகளை அகற்றும் அரசு, கொசஸ்தலை ஆற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் காட்டுவது ஏன்?

    * ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் ஆறுகளும் இதர நீர்நிலைகளும் மாசுபடுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகள் என்ன?

    * மழை நீரினை பாதுகாக்கவும் நிலத்தடி நீரினை மேம்படுத்துவதற்கும் பண்ணைக்காடுகளில் 60 பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.3 கோடி நிதியில் எங்கெங்கு பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும், அதன் பயன்பாடு தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற விவரமும் சட்டசபையில் அளிக்கப்படவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #KamalHaasan #MakkalNeedhiMaiam #TNAssembly
    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #KamalHaasan #MNMForCauvery
    சென்னை:

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், “காவிரி நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை சென்னை தி.நகரில் நடந்தது. அப்போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * காவிரி பிரச்சினை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

    * தமிழகத்தில் இருக்கும் தண்ணீரைப் பாதுகாக்க அனைத்து ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரவேண்டும். சிற்றணைகள், தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

    * காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை பகுதியாக அறிவிக்க சட்டபூர்வமான முயற்சிகள் எடுக்கவேண்டும்.

    * அனைத்து விவசாய விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை மேலும் அதிகரிக்கவேண்டும்.

    * விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு இணையாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கவனித்து தீர்வு காணவேண்டும்.

    * விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கவும் செயலாற்றவும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். அதற்காக வழிவகை செய்து, அதைத்தொடர்ந்து வழிநடத்த உதவியாக இருப்போம்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் கமல்ஹாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அளித்த பதில்களும் வருமாறு:-


    கேள்வி:- இந்த கூட்டத்தை 9 கட்சிகள் புறக்கணித்துள்ளதே? இந்த கூட்டத்துக்கு வர அவசியம் இல்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    கமல்ஹாசன்:- புரிதல் இல்லாமல், நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்ற விளக்கம் இல்லாமல் அப்படி சொல்லி இருக்கலாம். விளங்கி விட்டால் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், பா.ம.க.வும் இணைந்து போட்டியிடுமா?

    டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உள்ளாட்சி தேர்தல் முதலில் நடக்கப் போவது இல்லை. இது அரசியல் மேடை கிடையாது. பொதுவான மேடை. விவசாயிகளுக்காக நடத்தப்படுகிற மேடை. இதுபோன்ற பல மேடைகளில் நாங்கள் கலந்துகொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் கலந்துகொள்வோம். எங்களுடைய நோக்கம் விவசாயிகளை உயர்த்துவது தான். அதனால் இதில் அரசியலோ, அது சார்ந்தோ கருத்துகள் எதுவும் கிடையாது.

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தை நீங்கள் தொலைபேசியில் அழைத்ததாக சொன்னீர்கள். அவர் வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி இருக்கிறாரா?


    கமல்ஹாசன்:- நான் அழைத்தபோது, ‘நீங்கள் கட்சி ஆரம்பித்துவிட்டீர்கள். நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எப்படி வந்தேன் என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார். இது அவருடைய எண்ணம். அவர் வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். வரவில்லை என்றால் பரவாயில்லை. இது இன்றுடன் முடிய போகிற கூட்டம் அல்ல. இனியும் தொடரும். அப்போதாவது வருவார் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக புதிய முதல்- மந்திரியை சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா?

    கமல்ஹாசன்:- அதை விடவும் முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறதா? அதன்படி செயல்கள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவே, உறுதிப்படுத்தவே ஒரு குழு தேவைப்படுகிறது.

    கேள்வி:- விவசாய அமைப்புகள் எதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார்கள்?

    கமல்ஹாசன்:- நேர்மையை நம்பி இருக்கலாம் என்று நம்புகிறோம்.

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் மட்டும் புறக்கணிக்கவில்லை, அவர் கூறியதால் தான் நாங்கள் பங்கேற்கவில்லை என்று வைகோவும் கூறியிருக்கிறார். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்களா?

    கமல்ஹாசன்:- இருக்கலாம். அல்லது அது ஒரு விதமான அரசியல். இது வேறு விதமானது. அவ்வளவுதான்.

    கேள்வி:- காவிரி இறுதி தீர்ப்பு விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

    கமல்ஹாசன்:- எது நியாயமோ அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டே இருப்போம். அதுக்காக மத்திய- மாநில அரசுகளை விமர்சிக்கவோ, அவர்களுடன் உரையாடவோ தேவையான யுக்தியாக, பாதையாக இருக்கிறதோ அதை மக்கள் நீதி மய்யம் தேர்ந்தெடுக்கும்.

    கேள்வி:- இந்த கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்?

    கமல்ஹாசன்:- மக்களிடம் எடுத்துச் செல்வோம். தேவைப்பட்டால் எல்லாரும் சேர்ந்து எங்கே போய் போராட வேண்டுமோ, அங்கே போய் போராடுவோம். இது மக்கள் இயக்கமாக மாறிவிடும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கூறியதாவது:-


    இந்த கூட்டம் அடுத்து வரும் காலங்களிலும் அரசியலற்ற கூட்டமாக நடைபெறும். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பால் எந்த நன்மையும் கிடைக்காது. தமிழகத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. அணைகள் மாநிலத்தின் அதிகார வரம்பில் வரும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது.

    வாரியம் வேறு ஆணையம் வேறு. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழக அமைச்சர்களுக்கு காவிரி விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விவரம் தெரியவில்லை. எஜமான் (பிரதமர் நரேந்திர மோடி) என்ன சொல்கிறாரோ அதை இங்கு இருக்கும் தமிழக அரசு செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    தமிழன் என்ற முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். நானும், என் மகனும் தமிழர்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்போம். அடுத்து வர உள்ள எம்.பி. தேர்தலில் கர்நாடகாவின் ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு கபட நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் இரட்டை இலையை வைத்துக்கொண்டு, இரட்டை வேடம் போடுகிறார்கள். தமிழகத்தின் உரிமை விற்கப்பட்டுவிட்டது.

    வாரியம் என்று இருந்ததை ஆணையம் என்று மாற்றி வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை வேண்டும். பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நீர்வளத்துறை பெற்றிருந்தால், இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது. தி.மு.க. இந்த கூட்டத்துக்கு வந்திருந்தால் நாங்கள் பங்கேற்றிருக்கமாட்டோம். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். ஆனால் எங்களை போன்ற கட்சியினருக்கு நேரடியாக அழைப்பு விடுக்காமல், தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக பங்கேற்றேன். கூட்டத்தில் எனக்கு முரண்பாடு உள்ளது.

    இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.  #KamalHaasan #AnbumaniRamadoss #MakkalNeedhiMaiam #MNMForCauvery
    ஜனநாயக ஒளி தேசம் முழுவதும் பரவட்டும் என்று கர்நாடக அரசியல் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KamalHaasan
    சென்னை:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

    அதன்படி நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டமன்றம் மீண்டும் கூடியபோது எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.

    அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.


    இந்நிலையில், கர்நாடக அரசியல் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    ‘கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு’ என்று தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KamalHaasan
    கர்நாடக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேள்விக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கத்தில் மக்கள் மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தான் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்தேன். எங்களை முன்நிறுத்தி அல்ல. புதிய கட்சி தங்களை முன்னிறுத்திக் கொள்ள இந்த கூட்டத்தை நடத்துவதாக அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

    எங்களுடைய எண்ணம் நாளை தமிழக விவசாயிகளின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தீட்டுவதில், முயற்சியில் நாங்களும் பங்கு பெற்றோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள தானே தவிர நாங்களே இதை முன் நடத்தினோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள அல்ல. 40 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ள இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாகி விடாது.

    கர்நாடகா-தமிழகத்திற்கு இருக்கும் பிரச்சினை மட்டுமல்ல. விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப அவர்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கமல்ஹாசனிடம், கர்நாடக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு ‘கர்நாடக அரசியல் களம் ரணகளம்’ என்று பதில் அளித்தார்.  #KamalHaasan #MakkalNeedhiMaiyam
    ×