என் மலர்

  செய்திகள்

  பிரக்யா கருத்துக்கு மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - திக் விஜய் சிங்
  X

  பிரக்யா கருத்துக்கு மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - திக் விஜய் சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
  புது டெல்லி:

  நடிகர் கமல்ஹாசன் தனது கடந்த வாரம் அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று குறிப்பிட்டார்.  பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கமலின்  இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங்  நேற்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராகதான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.

  இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திக் விஜய் சிங் கூறுகையில், ‘நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என பிரக்யா  புகழ்ந்து கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம் ஆகும். பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

  இந்நிலையில் பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், நேற்று பாஜகவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரக்யா ‘நான் கூறிய கருத்து யாரையாவது பாதித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×