என் மலர்
நீங்கள் தேடியது "digvijaya singh"
- மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் திக்விஜய் சிங்.
- கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்து பேசினார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் முன்னாள் முதல் மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கட்சி தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
செய்தியை திறம்பட தெரிவிப்பது மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஒருபோதும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். ஒருபோதும் அடிக்க மாட்டார்கள். ஒருபோதும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள், மாறாக எங்களை சிறைக்கு அனுப்புவார்கள்.
ஆர்.எஸ்.எஸ் பொதுவாக 3 விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விவாதங்கள் நடத்துதல் மற்றும் இறுதியாக இயக்கத்திற்கு ஏற்படும் செலவுகள்.
நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராட விரும்பினால் அவர்களின் சொந்த விளையாட்டில் அவர்களை வெல்லுங்கள், நிச்சயமாக, உடல் ரீதியாக அல்ல, ஆனால் அறிவுபூர்வமாக என தெரிவித்தார்.
- கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது.
- ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அது இடிந்து விழுந்துள்ளது.
போபால்:
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு குறித்து பிரதமர் மோடி குறை கூறியிருந்தார். தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.
27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது, ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போதே நர்மதா கால்வாய் உடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார்.
- திக்விஜய் சிங் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்ததால் அந்த பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட்டை நிறுத்த மேலிடம் முடிவு செய்தது. கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக்கவும் சோனியா முடிவு செய்தார்.
இதற்கு கெலாட் உடன்படவில்லை. முதல்-மந்திரி பதவியை விட்டு விலக மறுத்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.
அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளுடன் 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதை அவர் அதிகார பூர்வமாக இன்று தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.
அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அவரும் நாளை மனு தாக்கல் செய்கிறார்.
இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.
- ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதலால் அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல்.
- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்.
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில், இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்கி உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சோனியா காந்தி, கெலாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தேர்தலில் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. நாளை காலை 11 மணிக்கு சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக அவர் கேரள மாநிலத்தில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்தார். வேட்புமனு தாக்குதலுக்காக நேற்று கேரளாவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ஒரே விமானத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் டெல்லி சென்றுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது கடந்த வாரம் அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்துக்கு நேற்று நடந்த 6-ம் கட்ட தேர்தலில் குறிப்பிடத்தகுந்த ஒரு தகவல் தொகுப்பு இது:-
* மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் ஓட்டு போடுவது வழக்கம். போபாலில் நேற்று அவர் வாக்குப்பதிவை பார்வையிட வேண்டி இருந்ததால், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட போகவில்லை. இதை அவரே ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார். அவர் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
* துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மனைவி உஷாவுடன் வந்து டெல்லி நிர்மாண் பவனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.
* உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்திக்கும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் சோனு சிங்குக்கும் இடையே ஒரு வாக்குச்சாவடியில் வைத்து நேரடி மோதல் ஏற்பட்டது. இருவரும் கைகளை நீட்டி பேசினர். சோனுசிங்கிடம் மேனகா காந்தி, “உங்கள் ஆதரவாளர்கள் வாக்காளர்களை மிரட்டுகின்றனர். இதெல்லாம் வேலைக்கு ஆகாது” என குறிப்பிட்டார். ஆனால் சோனு சிங் அதை மறுத்தார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் கோஷங்களை முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு வேட்பாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
* ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிதிஹ் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் சந்திரபிரகாஷ் சவுத்ரியின் வாகனத்தை விஷமிகள் தாக்கி சேதப்படுத்தி விட்டனர். அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் தலைவர் லம்போடர் மஹ்டோவின் வாகனமும் சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
* டெல்லி திலக் விஹாரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 111 வயதான பச்சான் சிங் என்ற வாக்காளர், சக்கர நாற்காலியில் வந்து வாக்குப்பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது பிற வாக்காளர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்தது. என்ன வேடிக்கை என்றால் ஆம் ஆத்மி என்றொரு கட்சி இருப்பதோ, டெல்லி முதல்-மந்திரி அந்தக் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் என்பதோ இவருக்கு தெரியவில்லை.
இவரைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி நடப்பதாக கருதுகிறார். இது அவரது இளைய மகன் ஜஸ்பீர் (63) வெளியிட்ட தகவல்.
* ஜார்கண்ட் மாநிலத்தில் சிங்பும் தொகுதியில் 106 வயதான புபலதாபால் என்ற பெண் ஓட்டு போட்டார். இவர் முதல் பொதுத் தேர்தலில் இருந்து ஓட்டு போட்டு வருவதாக தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங்கை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த நிலையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.