search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sadhvi Pragya"

    குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை இல்லை என மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SadhviPragya #LokSabhaElection
    மும்பை:

    மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தற்போது மத்தியபிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இந்தநிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் எனக்கோரி, மாலேகான் குண்டுவெடிப்பில் மகனை இழந்த நிசார் சையது என்பவர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நிசார் சையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இது குறித்து நீதிபதி, ‘ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க இந்த கோர்ட்டுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. இது தேர்தல் அதிகாரிகளின் வரம்புக்கு உள்பட்டதாகும். எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டார்.   #SadhviPragya #LokSabhaElection
    மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி பற்றி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக சாத்வி பிராக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். #PragyaThakur #HemantKarkare #martyrKarkare #PragyaThakurapologise
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இதே வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.
     
    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாத்வி பிரக்யா சிங், ‘மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை கைது செய்து லாக்கப்பில் அடைத்துவைத்து விசாரணை நடத்திய ஹேமந்த் கர்க்காரே என்ற போலீஸ்காரர் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் சித்ரவதைகளை செய்தார்.

    என்னை இப்படி கொடுமைப்படுத்தும் நீயும் உன் குடும்பத்தாரும் நாசமாக போவீர்கள்! என்று நான் அப்போது அவரை சபித்தேன். அதேபோல், 26-11-2013 அன்று மும்பை தாக்குதலின்போது அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடமையாற்றி வீர மரணம் அடைந்த காவல்துறை வீரர் ஹேமந்த் கர்க்காரே-வின் தியாகத்தை கேவலப்படுத்தும் விதமாக இப்படி பேசிய சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், ‘ஹேமந்த் கர்க்காரேவை பற்றி நான் முன்னர் தெரிவித்த கருத்து நமது நாட்டின் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் நான் கூறியதை திரும்பப் பெறுகிறேன்.

    நமது எதிரிகளின் துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட அவரது தியாகத்தை மதித்து, மன்னிப்பும் கோருகிறேன்’என சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்றிரவு தெரிவித்துள்ளார். #PragyaThakur #HemantKarkare #martyrKarkare #PragyaThakurapologise
    திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #BJP #SadhviPragya #DigvijayaSingh
    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங்கை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த நிலையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இவர் மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது. போபால் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க.வின் கோட்டையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. 1989-ம் ஆண்டு பிறகு 8 முறை அக்கட்சி இந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.  #BJP #SadhviPragya #DigvijayaSingh 
    ×