என் மலர்
நீங்கள் தேடியது "madurai HC"
- உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், வரதராஜன் கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே கடந்த 2013ல் சிவில் பிரச்சினை இருந்தது.
இந்த விவகாரத்தில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம், காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இதற்கு 4 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அப்போது நடந்த இரட்டை கொலையில் 4 பேரையும் சேர்த்துள்ளார். இதனால் வரதராஜன், கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் 92 நாட்களும், பரமசிவம் 53 நாளும் சிறையில் இருந்துள்ளார். இதற்காக இழப்பீடும், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கையும் கோரி 4 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் இறந்ததால், அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது:-
மனுதாரர்கள் 4 பேரும் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் இறந்ததால் எப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் கேள்வியாக உள்ளது. எனவே, அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும்.
வரதராஜன் கடலை முத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் நாளொன்றுக்கு ரூ. 7500 வீதம் தலா ரு. 6.90 லட்சமும். பரமசிவம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500ம் இழப்பீடு பெற தகுதி உள்ளது.
இதை உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடியில் உள்ள இரு தனியார் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டதுக்காக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவிலான விவசாயநிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டி.ஜி.பி. ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர் தனது கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடமே முறையிடலாம்.
டி.ஜி.பி. ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என மனுவை தள்ளுபடி செய்தனர். #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மேலும் மது வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? மதுரையில் டாஸ்மாக் பார்களின் உரிமத்தை ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக நீட்டித்தது ஏன்? என்றும் கேட்டனர்.
இந்த கேள்விகளுக்கு வருகிற 12-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக மேலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MaduraiHCBench #Tasmac
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அந்த கோவில்களுக்கு சொந்தமான கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்துள்ளனர். இதனால் கோவில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்வேறு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோவில் நிலங்களையும், சொத்துகளையும் பாதுகாப்பது குறித்தும், ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பதற்கு மாவட்ட அளவில் குழு அமைக்கவும், குறைந்த வாடகை செலுத்தி கோவில்களுக்கு சொந்தமான கடைகளை நடத்தி வருபவர்களை கண்டறிந்து வெளியேற்றவும், கோவில்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.
கோவிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விவரங்களை அந்தந்த கோவிலின் முன்பு பக்தர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பட்டியலிடவும், கோவில் பூஜை கட்டணங்கள், வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள் அனைத்தையும் இணைய தளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள தங்கும் விடுதிகளில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதைப்போல பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களின் விடுதிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், ஏன் செய்யவில்லை?.
திருப்பதியில் கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல், தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை?
ராமேசுவரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்) உள்ளனவா? அந்த கோவில்களில் அடிப்படை வசதிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
முடிவில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன ஆனது? ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை சமர்பிக்கவில்லை ? என கேள்வி எழுப்பினர்.
தமிழர் நாகரீகம், பண்பாட்டை அறிவது முக்கியம். ஆனால் இதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல. கீழடி அகழ் வாய்விலும் அதிகாரி இடம் மாற்றம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளால்தான் மத்திய தொல்லியல் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் விரைவாக குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை பிப்ரவரி 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழகத்தில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் இருந்தே ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு,
வட மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் போன்றவை திருவிழாக்களை போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர். இதில் சில எதிர்பாராத காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
ஆனால் கோவில் திருவிழாக்களில் தேர் இழுக்கும்போது இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பொது காப்பீடு செய்யப்படுகிறது. இதுபோல ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு, வடமஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் போன்ற விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு சாரா பொது காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது காப்பீடு எப்படி சாத்தியமாகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, கோவில் தேர் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது காப்பீடு செய்யப்படுகிறது. அதுபோல ஜல்லிக்கட்டுக்கும் காப்பீடு செய்யலாம் என்றனர்.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Jallikattu
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பியது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘தமிழக அரசு கூடுதல் விவரங்கள் அளித்ததும் மத்திய குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின்னர் 2 வாரத்தில் கஜா புயல் நிவாரணம் பற்றி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பு வக்கீல், மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். உடனே நீதிபதிகள், தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பற்றி 19-ந் தேதி (நாளை) பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #GajaCyclone