என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shruti Haasan"

    • நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பல்வேறு பணிகளுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனிடையே, நடைபயிற்சி மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபயிற்சிக்கு வரும் மக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரையும் சந்தித்து பேசும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

    அந்த வகையில், இன்று நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

    • பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் படம் பார்க்க சென்ற இடத்தில் சங்கடமான சூழல் ஒன்றில் சிக்கினார்.

    அந்த வீடியோவில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது நண்பர்களுடன் திரையரங்க வளாகத்திற்குள் காரில் சென்றபோது, அவர்களை ஒருவர் தடுத்து நிறுத்தினார். அவர் படம் பார்க்க வந்தவரா அல்லது திரையரங்க ஊழியரா என்பது தெரியவில்லை.

     அவரிடம் ஸ்ருதி ஹாசன், " நான் நடிகை, இந்த படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன். என்னை உள்ளே விடுங்க" என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • நடிகை ஸ்ருதிஹாசன் ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது 'சலார்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது புகைப்படக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற புடவையில் அழகில் மிரட்டும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு 'அழகினால் எங்களை கொல்லாதீர்கள் ராணி' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.
    • சினிமாவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சுருதிஹாசன் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

    கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். ஏழாம் அறிவு என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். சினிமாவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சுருதிஹாசன் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். சினிமா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பகிர்ந்து கருத்துக்களை பதிவிடுவார்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகையை நண்பருடன் சேர்ந்து கொண்டாடி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது அவரது பெயரை உடலில் வரைந்து உள்ள டாட்டூ தெரியும்படி அவர் புகைப்படம் வெளியிட்டு கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் வருமாறு:-

    இந்த நேரத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து வெளியே வர விரும்புகிறேன். இந்த முறை நான் எழுந்து நின்று கத்துகிறேன். நான் விஷயங்களை என் வழியில் செய்வேன், இது என் வழி அல்லது நெடுஞ்சாலை என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.


    இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "க(ம)லை …. மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! (அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.) ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கிய போது, அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில்,இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்.


    • 'இனிமேல்’ முழு ஆல்பம் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது
    • ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'லியோ' படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்தின் 171- படத்தை இயக்க உள்ளார்.இதற்கான 'ஸ்கிரிப்ட்' தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், 'இனிமேல்' என்கிற பெயரில் துவங்கும் ஆல்பம் பாடலில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனராஜ் நடித்து உள்ளார்.ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கி உள்ளார்.

    இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசன் மிக நெருக்கமாக இணைந்து நடித்து உள்ளார். கவர்ச்சி தோற்றத்தில் உருவான இந்த பாடலின் 'டீசர்' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.




    இணைய தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமான 'கமெண்ட்ஸ்' பதிவு செய்தனர்.மேலும் முழுப் பாடல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

    இந்நிலையில் 'இனிமேல்' முழு ஆல்பம் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார்.
    • இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த "ஹேராம்" என்ற படத்தில் வல்லபபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார்.

    அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த "லக்" என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

    இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அதிக ஆர்வம் உண்டு.இவரது இசை திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் 'தேவர் மகன்' படத்தில் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலை பாட வைத்தார்.




    மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் ஸ்ருதி பாடிய "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் குறிப்பிடத்தக்கது. இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது.பல விருதுகள் பெற்றுள்ளார்.

    2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் ஆகியோருடன் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார்.டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகி உள்ளார்.




    இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இதன் படப்பிடிப்பில் ஸ்ருதி தற்போது இணைந்துள்ளார். மேலும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடம் அவருக்கு வழங்கப்பட்டது
    • ஸ்ருதிஹாசன் திடீரென இந்த படத்தில் இருந்து தற்போது விலகி விட்டதாக கூறப்படுகிறது

    பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த "ஹேராம்" என்ற படத்தில் வல்லபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார்.

    அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த "லக்" என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'ஏழாம்அறிவு' என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.




    இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

    இவரது இசைத்திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் 'தேவர் மகன்' படத்தில் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலை பாட வைத்தார்.

    மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் "செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடலை பல்வேறு பாடகிகளுடன் ஸ்ருதி இணைந்து பாடியுள்ளார். இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. பல விருதுகள் பெற்றுள்ளார்.

    2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் ஆகியோருடன் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார்.




    டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகினார்.

    இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடம் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திடீரென இந்த படத்தில் இருந்து தற்போது விலகி விட்டதாக கூறப்படுகிறது. காரணம் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாக வில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டு.
    • ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுருதிஹாசன் தற்போது மும்பையில் தங்கி இருக்கிறார். அங்கு ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.

     காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இதையடுத்து காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சுருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக மும்பையில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதில் காரை விட ஆட்டோவில் போவதே சிறந்தது என்கின்றனர்.

    அமிதாப்பச்சனும் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலால் காரை ஒதுக்கி விட்டு ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடந்தது. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமன்றி சுற்றுச்சுழலுக்கும் சிறந்தது. நடிகர்களுக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லவும் உதவுகிறது என்கின்றனர்.

    • இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
    • ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார்.

    இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.

    ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

    அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

    இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார்.

    இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.

    'இந்தியன் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

    முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

    கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகை ரச்சிதா ராம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

    நடிகை ஸ்ருதிஹாசன் கூலி படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகரப்பூரவமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கையில் ஒரு கோடாரியுடன் ஸ்ருதிஹாசன் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது.
    • இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாக வளம் வரும் ஸ்ருதி ஹாசன் கடைசியாக பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகி உள்ளது.

    'தி ஐ' (The Eye) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசனுடன் மார்க் ரவுலி, அன்னா சவ்வா, லிண்டா மார்லோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது. தனித் தீவில் நீரில் மூழ்கி உயிரிழந்த தனது காதலனின் அஸ்தியை கரைக்க ஸ்ருதி ஹாசன் முயலும்போது அங்குள்ள உள்ளூர் மக்களால் பின்பற்றப்படும் ஒரு பழங்கால சடங்கினால் சிக்கல் ஏற்படுவதாக கதை நகர்கிறது.

    மெலனி டிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர்தற்போது வெளியாகி உள்ளது. சைகோலாஜிக்கல் திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

    இந்தியாவில் இந்த படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×