உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் - நெகிழவைக்கும் சம்பவம் - வீடியோ

சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய ஸ்ருதி ஹாசன் - நெகிழவைக்கும் சம்பவம் - வீடியோ
Published on

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற நடிகை ஸ்ருதி ஹாசன் உதவி செய்துள்ளார்.

ஆழ்வி என்ற சிறுமி MSMD எனப்படும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயைக் குணப்படுத்த சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்குப் பெரும் தொகை தேவைப்பட்டது.

சிறுமியின் நிலையை அறிந்த ஸ்ருதி ஹாசன், உடனடியாக சிகிச்சைக்கான முழு நிதி உதவியையும் வழங்கி, சிறுமிக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கவும் உதவியுள்ளார்.

இதனால் அந்தச் சிறுமிக்குத் தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது அந்தச் சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளார்.

சிறுமியுடன் அவரது பெற்றோர் ஸ்ருதி ஹாசனை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி ஸ்ருதி ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   

"எங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது ஸ்ருதி ஹாசன் அவர்கள்தான். அவர் செய்த இந்த உதவியை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது" என்று சிறுமியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com