search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech"

    • ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளும் சான்றி தழ்களை வழங்கினார்.

    கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்பட 5 ஊர்களில் நடத்தப்பட்டு இறுதியாக ராஜபாளை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் நினைவு சுழற் சின்னம் (செங்கோல்) வழங்கப்பட்டது. அதனை முதல்-அமைச்சரின் பார்வைக்கு அவர் அனுப்பி வைத்தார்.

    இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    இயற்கை வளங்களை பாதுகாத்து நமது பாரம்பரிய விலங்கான யானைகளை பாதுகாப்பது அனை வருடைய கடைமையாகும். ராஜபாளையம் தொகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறு வதற்கு வசதியாக ராஜபா ளையம் தொகுதிக்கு தனி யாக புதிய வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப் படும் பணிகள் மருத்துவ மனையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் துணைவியார் நிர்மலா ராஜபாளையம் தொகுதி வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு நல்லபல திட்டங்களை செயல் படுத்திக் கொண்டு வரு கிறார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலா, நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 20-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாட ஏற்பாடு
    • அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் 70-வது வார விழா தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.

    தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க. வாஞ்சிநாதன் தலைமை தாங்கி கூட்டுறவு கொடியை ஏற்றிவைத்தாா்.

    இதையடுத்து அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா். விழாவில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் வாஞ்சிநாதன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை இலக்காக வைத்து கூட்டுறவு அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றாா்.

    விழாவில் சரக துணைப்பதிவாளா் மது, கூட்டுறவு துறை அலுவலா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், கூட்டுறவாளா்கள், சங்க உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

    விழாவில் கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.

    நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது. இதே மண்டபத்தில் இலவச ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

    எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் கல்வித் திட்டம் சனிக்கிழமையும், கப்பாலாபணியா் நல நிலக் குடியேற்ற கூட்டுறவு பண்ணை சங்கத்தில் மரக்கன்று நடும் விழாவும், ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட விழா நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    • 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.
    • ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அதிகரிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார குழு கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். 80-வது வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான மாரிசெல்வன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் பேசியதாவது:-

    தெருநாய்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரின செயல்பாடு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருப்தியாக இல்லை. எனவே அதில் புதிய முறையை கொண்டு வர வேண்டும். தகுதியானவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தினால் தெருநாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:-

    தற்போது குப்பை பிரச்சினை தீவிரமாக உள்ளது. தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பையால் குப்பை மேலாண்மையில் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதார குழுவினர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உறுப்பினர்கள் கேள்வி கேட்க வேண்டும். உரிய பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகள், பணியாளர்களுக்கு உள்ளது. அப்படி பதில் தரமறுத்தால் மெமோதரப்படும். அதேபோல் ஏழ்மையான மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் சிவக்குமார், நகர் நல அலுவலர் தாமோதரன், உதவி நகர் நகல அலுவலர் வசந்த் திவாகர், பொது சுகாதார குழு உறுப்பினர்கள் குமுதம், மணியன், சம்பத், சுமித்ரா, அம்சவேணி, கமலாவதி, வசந்தாமணி, அஸ்லாம் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 28 ஊராட்சிகளை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்து பேசினர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திக்கேயன் பேசுகையில்,

    தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக தொடர்ந்து பல நல்லத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை அதிகாரிகள் உரிய முறையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் மக்களை எளிதில் சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிய முடியும். அந்த வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக அரசின் பல நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் சீனியார் உள்ளிட்ட உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உண்டு.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மருது அய்யனார் கோவில் அரங்கில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதனை ஜெயலலிதா உயிரோட்டமாக வளர்த்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஆலமரமாக்கி உள்ளார். நீங்கள் இங்கே வந்து இளைப்பாறலாம். அ.தி.மு.க. பூத் கமிட்டியினர் முறையாக செயல்பட்டால் வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் எடப்பாடி பழனிசாமி பிரதமர் யார்? என்பதை சுட்டிக்காட்டுவார். அவரே பிரதமராகும் வாய்ப்பு உண்டு. எனவே பூத் கமிட்டியினர் தீவிரமாக செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை தி.மு.க. அழிக்க முயற்சிக்கிறது. பண்டிகையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பட்டாசு கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கலாநிதி, நகரச் செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா,விருதுநகர் மாவட்ட ஜெ.பேரவை துணைத்தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விண்வெளியில் இதுவரை 94 விண்கலங்கள், 125 செயற்கைகோள் ஏவப்பட்டதாக தகவல்
    • இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது என்று பெருமிதம்

    கோவை.

    கோவையில் நடந்த விழாவில் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் டாக்டர்.வீரமுத்துவேல் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும், இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய். சைக்கிளில் துவங்கப்பட்ட இஸ்ரோ பயணம் தற்போது எந்தளவிற்கு வந்துள்ளது என்பதற்கு சந்திராயன் 3 சாட்சி.

    விண்வெளியில் 94 விண்கலங்கள் இதுவரை ஏவப்பட்டுள்ளது. 125 செயற்கைகோள் ஏவப்பட்டு உள்ளது.

    மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மதிப்பெண்களும் முக்கியம் தான். இருப்பினும் நாம் தேர்வில் திறமையாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும்.

    இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதற்கு மெக்கானிக் பொறியியல் என ஒரு துறை மட்டுமே படிப்பது என்று போதாது.

    பல்வேறு துறைகளின் அறிவும், தேர்வு செய்யும் துறையின் தனித்துவமாக மிளிர வேண்டும். அதனால், தேர்வு செய்யும் படிப்பில் திறம்பட படியுங்கள்.

    மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு மட்டுமின்றி இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ரேகிங் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது:-

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரேகிங் புகார்கள் பெறப்படும் வகையில் புகார் பெட்டிகள், அதேபோல் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் அரசு தங்கும் விடுதிகளில், சம்மந்தப்பட்ட வார்டன்கள் ரேகிங் தொடர்பான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரேகிங் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்திரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா (பொது), வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதரதுல்லா (கூடலூர்), வட்டாட்சியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக சட்டசபை தேர்தலில் ஓ.பி.எஸ். தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என தர்மர் எம்.பி பேசினார்.
    • இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாத புரம் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்தின் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் மூக்கையா, மாநில வழக் கறிஞர் பிரிவு செயலாளர் நவநாதன் முன்னிலை வகித்தனர்.

    முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துச் சாமி வரவேற்றார். கூட்டத் தில் தர்மர் எம்.பி.பேசிய தாவது:-

    நமது ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். செயல்பாடு களை தமிழகமே உற்று நோக்கி கவனிக்கிறது. திருச்சி மாநாடு இந்திய ளவில் பேசப்பகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வரவேற்பு கொடுக்க வேணடும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். நம் உழைப்பு என்றும் வீணாவதில்லை. உழைப்புக்கேற்றபலன் கிடைக்கும். நடிப்பவர் களைப் பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை. நமது நிர்வாகிகள் யாரும் சோடை போன தில்லை. நமது நிர்வாகிகளை மக்களே பாராட்டுகின்றனர்.

    இழந்த எல்லாம் நம்மை வந்து சேரும் சூழல் உருவாகி உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பரமக்குடி திலகர், மாரந்தை நீதி தேவன், தூரிமுருகேசன் உள்பட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க 52 -ம் ஆண்டு தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் புதுவயலில் நடைபெற்றது.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நரிவிழி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், புதுவயல் பேரூர் செயலாளர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் விஜய்கணேஷ், தஞ்சை சேகர் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், நல்லாட்சி தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணிணி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு 12 ஆயிரம் கோடியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வீரசேகர், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா அம்பலம், ஊரவயல் ராமு, நகர செயலாளர்கள் மெய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • முதல் 3 இடங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு போட்டிகள் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரசூல் பாஷா, சிவப்பிரகாசம், மலையரசன், சரவணன், வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்

    சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கருணாநிதி வரலாறு குறித்த பேச்சு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும் போது, ஏழை தொழிலாளர்களின் மகன், மகள்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்தவர்கருணாநிதி. அவர் வழியில் இன்று ஆட்சி செய்யும்முதலமைச்சர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இன்று பெண்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் என்றார்.

    பேச்சுப்போட்டியில் பல்வேறு கல்லூரியிலிருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு கருணாநிதியின் வரலாற்றுகளையும், தமிழக மக்களுக்கு அவர் செய்த பல்வேறு சாதனைகளையும், பற்றி எடுத்துரைத்தினர். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி, ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், நகர செயலாளர் கார்த்திக்,தொண்டரணி பாஷா விளையாட்டு மேம்பாட்டு அணி வக்கீல் சந்திரன், அட்மா குழு வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட முதல் இ3டங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    • தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

     அரவேணு,

    காந்தி ஜெயந்தி நாளான நேற்று கோத்தகிரியில் உள்ள 11 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. நடுஹட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அருணா முதல் முறையாக பங்கு பெற்ற கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனும் பங்கு பெற்றார்.

    அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகளிரின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்த அரசு கொண்டு வந்த முன்மாதிரி திட்டங்களில் புதுமைப்பெண் திட்டமும் ஒன்றாகும். மேலும் நான் முதல்வன் முலம் மாணவ-மாணவிகளுக்கு எதிர்கால கல்வி குறித்து சிறப்பான ஆலோசனை வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை சார்பில் 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு மருத்துவ புத்தகங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தார்ப்பாலின் மண்புழு உர படுக்கை செடி தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    மேலும் பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை அமைச்சர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டனர் முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராம சபை குறித்து பேசும் காணொலி காட்சியை அனைத்து மக்கள் முன்னிலையில் பார்வையிட்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் அதன் தலைவர் சுமதி சுரேஷ் தலைமையிலும், கொனகவக்கரை ஊராட்சியில் ஜெயப்பிரியா தலைமையிலும், நெடுங்குளா ஊராட்சியில் சுகுணா சிவா தலைமையிலும், குஞ்சப்பனை ஊராட்சியில் விமான வேல் மணிகண்டன் தலைமையிலும், கோடநாடு ஊராட்சியில் சுப்பிகாரி தலைமையிலும், தேனாடு ஊராட்சியில ஆல்வின் தலைமையிலும், அரக்கோடு ஊராட்சி ஷீலா தேவி, தெங்குமரடா ஊராட்சியில் அதன் தலைவர் மனோகரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. 

    • நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்று தகவல்
    • அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று கேள்வி

    குன்னூர்,

    குன்னூர் வி.பி.தெரு, கலைஞர் திடலில் நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. குன்னூர் நகர தி.மு.க செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர் கான் வரவேற்றார். நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா. முபாரக் முன்னிலை வகித்தார்.

    பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தமான சின்னம் இல்லை என்பது வரலாறு. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 75 ஆண்டுகளாக பவள விழா காணும் வகையில், தி.மு.க கட்சி ஒரே சின்னத்தில் இன்று வரை உதயசூரியன் சின்னத்தில் மட்டும் போட்டியிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி கூட முன்பு ரெட்டைகாளை பசுக்கன்று, கை ராட்டையில் போட்டியிட்டது. தற்போது கை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல அ.தி.மு.க.வும் பல சின்னங்கள் மாறி உள்ளது.

    இரட்டைப்புறா, சேவல் மற்றும் ஜெயலலிதா இறந்தவுடன் குக்கர் மற்றும் பல்வேறு பிரிவாக அந்த கட்சியின் சின்னங்கள் மாறி உள்ளன. ஆனால் 75 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னத்துடன் போட்டியிடும் நாட்டின் ஒரே கட்சி தி.மு.க மட்டும் தான். அன்று முதல் இன்று வரை ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறோம். அ.தி.மு.க.வின் தற்போதைய சின்னமும் வரும் தேர்தலில் இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. ஆகையால் எந்தக் கட்சிக்கும் இல்லாத ஒரு நிலைப்பாடு தி.மு.க.வுக்கு மட்டும் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, மாநில விளையாட்டு மேம்பாட்டுதுறை துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத்தலை வருமான வாசிம்ராஜா. குன்னூர் நகரமன்ற தலை வர் ஷீலா கேத்தரின், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    ×