என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ground water"
- நிலத்தடி நீரை பாதுகாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு ஊராட்சி யில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலக தண்ணீர் தினமான இன்று சிவகங்கை மாவட் டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கு வதற்கான பயனாளி பட்டியல் தேர்வு செய்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாக கொண்டு, முதல்-அமைச்சர் தமிழ கத்தின் அனைத்துப்பகுதி களிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.
தண்ணீர் மேலாண் மைக்கு தமிழ கத்தின் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் சரஸ்வதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 20 கிராங்களில் உள்ள பாசன குளங்கள் முதல்கட்டாக புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- நெல்லை மாவட்டத்தில் 75 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
நெல்லை:
சிறு பாசன குளங்கள், நீர் நிலைகள் புனரமைப்பு திட்ட தொடக்க விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறு குளம் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மானூர் யூனியனுக்குட்பட்ட 20 கிராங்களில் உள்ள பாசன குளங்கள் முதல்கட்டாக புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த பணிகள் முடிவடையும்.
இதனால் அங்கு மழைக்காலங்களில் கூடுதலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அடுத்த ஆண்டுக்குள் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதேபோல் திசையன்விளையில் உள்ள அதிசய கிணறு மூலமும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 75 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழைக் காலங்களில் நெல்லை மாநகராட்சி பகுதிக்கு திருப்பணி கரிசல்குளத்தில் இருந்து தண்ணீர் புகும். இதனை தடுக்க திருப்பணிகரிசல்குளத்தில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.
இதனால் மழைக்காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.
2018-19-ம் ஆண்டு 3 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள 139 கிணறுகளில் 3 மாதம் மட்டுமே காணப்பட்ட தண்ணீர் தற்போது 9 மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது.
- ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை.
உடுமலை :
நீராதாரங்கள் பராமரிப்பில் அக்கறை காட்டாததால் நீர் வழித்தடங்கள் குளம் குட்டை உள்ளிட்டவை நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதனால் அடைமழை பெய்தாலும் அவை நீர்வரத்தை பெற முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் உடுமலை தளி பகுதியில் ஒரு சில நீராதாரங்களைத் தவிர மற்றவைகள் நீர் இருப்பை பெற முடியாமல் தவித்து வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீராதாரங்களை மையமாகக் கொண்டு அனைத்து விதமான உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது. அவற்றை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை. இதனால் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளானதுடன் மண் சூழ்ந்து மேடாகி விட்டது. இதன் காரணமாக முழுமையான நீர் வரத்தை பெற முடியாமலும் அதையும் மீறி வெள்ளப்பெருக்கு நீராதாரத்தை அடைந்தால் வீணாகி வருவதும் தொடர்கதையாக உள்ளது. நீராதாரங்கள் பராமரிப்பில் முனைப்பு காட்டாததால் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தும் நீர்வரத்தை பெறாமல் குளம் குட்டைகள் தவித்து வருகிறது. இதனால் கிணறு ஆழ்குழாய் கிணறுகள் விரைவில் வறண்டுவிடுவதுடன் விவசாய தொழிலும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.
விவசாயத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தளிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள நீராதாரங்கள் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்து அவற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வர வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருவதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதில் கிணறு, குளம், குட்டை, ஏரி, ஓடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாலும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் பாழாகி வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் உப்பாறு ஓடை வழியாக செல்கிறது. இதனால் குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் இறுதியாக உப்பாறு அணைக்கு செல்கிறது . உப்பாறு அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை செல்லும் வழிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. சில இடங்களில் ஓடை தெரியாத அளவிற்கு சீமைகருவேல மரங்களாக காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் ஓடை வழியாக செல்லும் மழை நீர் வீணாகிறது. சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ள நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாறு ஓடை பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.எனவே உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை மழைக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரையில் கன மழை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டம்முழுவதும் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அலங்கா நல்லூர், கள்ளந்திரி, வாடிப்பட்டி உள்ளிட்ட முல்லைப் பெரியாறு வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் 52 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சிட்டம் பட்டி- 27
கள்ளந்திரி-12
தனியாமங்கலம்-41
மேலூர் -57
சாத்தையாறு அணை- 5
வாடிப்பட்டி-14
திருமங்கலம் -52
உசிலம்பட்டி -14
மதுரை வடக்கு -24
தல்லாகுளம்-35
விரகனூர்-12
விமான நிலையம்- 21
இடையபட்டி-31
புலிப்பட்டி-39
சோழவந்தான்-30
மேட்டுப்பட்டி-8
குப்பனம்பட்டி-20
கள்ளிகுடி-66
பேரையூர் -18
ஆண்டிப்பட்டி-27 முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,132 கனஅடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து 2,016 கன அடி தண்ணீர் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. வைகை அணையில் நீர்மட்டம் 59.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி க்கு 1,546 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் விநியோகத்திற்காகவும், விவசாய தேவைகளு க்காகவும் 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
- இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும்.
- நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும்.
பேராவூரணி:
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழா பேராவூரணியில் நடைபெற்றது.
, தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தங்க. குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மருது. குமார் வரவேற்றார். தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத் தமிழர் கொள்கை அறிக்கையை வெளியிட கவிஞர் கான்முகமது பெற்றுக் கொண்டார். இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் கொள்கை விளக்க உரையாற்றினார்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும், அதேபோல் இந்த நகரங்களிலும் துணை தலை நகரம் அமைக்க வேண்டும். மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், அக்னிபாத் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், ராஜமாணிக்கம், ஜெயராஜ், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், பழனிவேலு, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் ரவீந்திரன், அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆயர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாதவரம்:
மாதவரம், கண்ணம்பாளையம். விளங்காடுபாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து நிலத்தடி நீரை திருடி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
எனினும் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் திருடி விற்கப்படும் சம்பவம் நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாதவரம் 3-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதவரம் போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக தண்ணீர் திருட்டை நிறுத்த ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை.
கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 4.32 மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுள்ளது.
அங்கு 2017-ம் ஆண்டு 6.74 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கின்படி 11.06 மீட்டரில் நிலத்தடி நீர் சென்று விட்டது.
இதேபோல் திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை 55 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருக்கவே வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அம்மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு 15.59 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.34 மீட்டராக உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.25 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தெற்காசிய நீர் ஆய்வு ஒழுங்கு முறை கூட்டமைப்பு தலைவர் கனகராஜன் கூறியதாவது:-

நீர் நிலைகளில் மழை தண்ணீரை சேமிக்காத வரை நிலத்தடி நீர்மட்டம் உயராது. நமது நீர் நிலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வறண்டு பாலைவனமாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Groundwater
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற அறிக்கையை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளது சட்ட விரோதம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கையை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாதது தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் அவர் வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #ThoothukudiSterlite #CentralGovernment #ChennaiHighCourt
தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நிஜ லிங்கம் கூறியதாவது:-
3-வது நாளாக நீடித்து வரும் வேலை நிறுத்தத்தால் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சப்ளை செய்த தண்ணீர் 2 நாட்கள் வரை இருந்தது.
இன்று முதல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்வோம். லாரிகள் ஓடாததால் குடிநீர் இல்லாமல் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடுகின்ற நிலை உருவாகி உள்ளது.
குடிநீர் வாரியத்தால் முழுமையாக தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில் ஈடுபட்டன.
வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து லாரிகளும் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீரை அரசு எடுக்க சொன்னால் நாங்கள் எடுத்து வினியோகிக்க தயாராக இருக்கிறோம். அரசு சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் எங்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால் நிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-
தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஓட்டல்கள், தங்கும்விடுதிகளை மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதி ஓட்டல்கள், ரெஸ்ட்டாரண்ட்டுகள் மூடப்பட்டுவிட்டன. இந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வராவிட்டால் நாளை முழுமையாக மூடக்கூடிய நிலை உருவாகும்.

அதனால் இன்று நிலைமை மேலும் மோசமாகும். அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். தனியார் தண்ணீர் லாரி பிரச்சனையில் முடிவு தாமதம் ஆனால் பொது மக்கள், ஓட்டல், லாட்ஜ், ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும்நிலை ஏற்படும்.
சொந்த லாரிகள் மூலம் அரசு வழங்கும் தண்ணீரை எடுத்தால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் லாரியை மடக்குகிறார்கள். நேற்று வரை கேன் வாட்டரை பயன்படுத்தி வந்தோம். தற்போது கேன் வாட்டரும் சப்ளை இல்லாததால் ஓட்டல்களை நடத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. #WaterCan #DrinkingWater