search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry owners"

    • வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    • போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    திருப்பூர்:

    காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்கிறது. போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஓரிரு நாளில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் பங்கேற்பது, லாரிகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    • திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் 300 லாரிகள் இயங்கி வருகின்றன.
    • திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அரிசி, சிமெண்ட், உரம், கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலமாக எடுத்து சென்று சப்ளை செய்யப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் 300 லாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு சரக்கு ெரயில்களில் வரும் அத்தியாவசிய பொருட்கள் இந்த லாரிகள் மூலம் 20 மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் ரோடு வசதி மற்றும் பார்க்கிங் வசதி கேட்டு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், குட்செட் லாரி உரிமையாளர்கள் சங்கம், மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம், காண்ட்ராக்டர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இன்று முதல் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இதில் 300-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் எம்.சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜி. கே.முருகேசன், சேகர் மாரி செல்வம் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் குட்ஷெட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர் ஜான்சனிடம் மனு அளித்தனர்.

    இதுபற்றி சங்கர் கூறும்போது, முன்பு ெரயில்வே இடத்தில் லாரிகளை பார்க்கிங் செய்தோம். இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குட்செட் லாரி உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றோம். நாங்கள் இங்கிருந்து திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அரிசி, சிமெண்ட், உரம், கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலமாக எடுத்து சென்று சப்ளை செய்கிறோம்.

    நாளைய தினம் வட மாநிலத்தில் இருந்து இரும்பு கொண்டுவரப்படுகிறது. அதனை நாளைக்கு மறித்து போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. #LorryStrikes
    திருவாரூர்:

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், குடவாசல், ஆலங்குடி உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் சுமார் 3200 லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றன.

    இந்த நடைமுறையை மாற்றி அரவை பணிகளுக்காக ஏற்றப்படும் லோடுகளை மில் உரிமையாளர்களே தங்களது லாரிகள் மூலம் ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்கும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போட்டும் மில் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக் கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு, மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற நடைமுறையை கண்டித்து, இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இதனால் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrikes

    நிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். #WaterCan #DrinkingWater
    சென்னை:

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நிஜ லிங்கம் கூறியதாவது:-

    3-வது நாளாக நீடித்து வரும் வேலை நிறுத்தத்தால் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சப்ளை செய்த தண்ணீர் 2 நாட்கள் வரை இருந்தது.

    இன்று முதல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்வோம். லாரிகள் ஓடாததால் குடிநீர் இல்லாமல் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடுகின்ற நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் வாரியத்தால் முழுமையாக தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில் ஈடுபட்டன.

    வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து லாரிகளும் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீரை அரசு எடுக்க சொன்னால் நாங்கள் எடுத்து வினியோகிக்க தயாராக இருக்கிறோம். அரசு சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் எங்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால் நிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஓட்டல்கள், தங்கும்விடுதிகளை மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதி ஓட்டல்கள், ரெஸ்ட்டாரண்ட்டுகள் மூடப்பட்டுவிட்டன. இந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வராவிட்டால் நாளை முழுமையாக மூடக்கூடிய நிலை உருவாகும்.

    சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஓட்டல்களில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடிவதில்லை. தனியார் லாரிகளின் மூலம் தான் வெளியூரில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. நட்சத்திர ஓட்டல் முதல் சிறிய ஓட்டல் வரை தனியார் லாரி தண்ணீரை நம்பிதான் உள்ளன.


    தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களை நடத்த முடியாது. அதனால் ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினோம். இதில் அரசின் முடிவை தெரிவிக்காதவரை லாரிகளை இயக்க மாட் டோம் என்று கூறிவிட்டனர்.

    அதனால் இன்று நிலைமை மேலும் மோசமாகும். அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். தனியார் தண்ணீர் லாரி பிரச்சனையில் முடிவு தாமதம் ஆனால் பொது மக்கள், ஓட்டல், லாட்ஜ், ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும்நிலை ஏற்படும்.

    சொந்த லாரிகள் மூலம் அரசு வழங்கும் தண்ணீரை எடுத்தால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் லாரியை மடக்குகிறார்கள். நேற்று வரை கேன் வாட்டரை பயன்படுத்தி வந்தோம். தற்போது கேன் வாட்டரும் சப்ளை இல்லாததால் ஓட்டல்களை நடத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. #WaterCan #DrinkingWater
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:
                 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தருமபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் 3 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    ரிக் உரிமையாளர் சங்கத்தினர் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிர்ணயிக்கும் முறை மத்திய அரசு தனியாருக்கு முதலில் வழங்கியது. அந்த நடைமுறை மாற்றி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை வழங்கியது. இந்த நடைமுறையால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது. 

    தருமபுரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்டரிக் வண்டி உரிமையாளர்கள் உள்ளனர். அவர்கள் ரிக் வண்டிகளை வடமாநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணியை செய்து வந்தனர். தற்போது  உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து 3 அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை தருமபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று முதல் தொடங்கியுள்ளோம். 

    இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் வட மாநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள், மற்றும் போர்வெல் போடும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    நாள்தோறும் டீசல் விலை உயர்ந்து வருவதால் நாங்கள் போர்வெல் போடுவதற்கும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் சரியான விலையை நிர்ணயிக்க முடியாமல் திணறி வருகிறோம். எனவே மீனவர்களுக்கு  மோட்டார் படகிற்கு பெட் ரோல் மற்றும் டீசலுக்காக  மானியம் வழங்குவதுபோல் ரிக்  வண்டி களுக்கென்று டீசலுக்காக மானியம் வழங் கினால் நாங்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல் போடுவது போன்ற பணிகளை செய்து கொடுப்போம். எனவே, மத்திய, மாநில அரசுகள் ரிக் வண்டிகளுக்கான டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடந்த 4 நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வருகிற 27-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், மத்திய மந்திரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.#LorryStrike
    சென்னை:

    டீசல் விலை தினசரி உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்வு போன்றவற்றை மத்திய அரசு ‘வாபஸ்’ பெறக்கோரி கடந்த 18-ந் தேதி, அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியது.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்பட 40 சங்கங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

    4-வது நாளாக நேற்றும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தது. அதன்படி நேற்று டெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றும், இதுதொடர்பாக வருகிற 27-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:-

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தில் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் எங்கள் சங்க நிர்வாகிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. எங்கள் சங்க நிர்வாகிகளுடன் டெல்லியில் வருகிற 27-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி அளித்திருக்கிறார்.



    இதனை அரசு செயலாளர் எங்களிடம் தெரிவித்தார். எனவே அன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மூன்று தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் வழக்கம்போல் நமக்கென்ன என்று இருந்துவிடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

    டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
    ×