என் மலர்
நீங்கள் தேடியது "Diesel price"
- கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
- ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் விதமாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சித்தராமையாவை காஸ்ட்லீ டீசல் என்று கிண்டலடித்த பாஜக, வின் டீசல் என்றால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast & Furious), சித்தராமையா ஸ்கேம் அண்ட் இன்ஜுரியஸ் (scam and injurious)" பாஜக விமர்சித்துள்ளது.
- கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
சித்தராமையா தலைமையிலான இந்த அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதுபோல் பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய நிதி ஆண்டு தொடங்கிய முதல் நாளான நேற்று முதலே விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-திருப்பதி, பெங்களூரு-தேவனஹள்ளி சாலைகளில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலையை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பால் விலை, மின்சார கட்டணம், குப்பைக்கு வரி விதிப்பு ஆகியவை நேற்று அமலுக்கு வந்த நிலையில் அரசு தற்போது டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- கர்நாடகாவில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
- இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது.
இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க., மாநில அரசு கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை முதல் மந்திரி மற்றும் அரசு திரும்பப் பெறாவிட்டால் திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட மையங்களிலும், பிற இடங்களிலும் போராட்டம் நடத்துவோம். எரிபொருள் விலை உயர்வு முடிவை திரும்பப் பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது.
- எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பிற நாடுகளுக்கான விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய சூழல் ஏற்பட்டால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உருவாகும்.
இந்த நிலையில், 'பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "புவிசார் அரசியலில் பதற்றமான சூழல் நிலவி வரும் போதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது."
"இதனால், தடையற்ற கச்சா எண்ணெய் வினியோகம் குறித்து கவலை கொள்ளத் தேலையில்லை. மேலும். கடந்த காலங்களைப்போல், இந்தியா மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது."
"எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு. வரும் நாட்களில் விலை குறையும் என்றே நினைக்கிறேன். மேலும், இது என் தனிப்பட்ட கருத்து," என்று தெரிவித்தார்.
- பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.
இந்தநிலையில் தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது 22.87 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.
கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அவற்றின் விலைகளும் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி இருந்ததை விட 22.87 சதவீதம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.19.34 குறைந்து ரூ.67.84 ஆக இருக்க வேண்டும். அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.18.20 குறைந்து ரூ.61.37-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.90, டீசல் ரூ.76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது 22.87 சதவீதம் குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20 சதவீதம், 3.66 சதவீதம் என்ற அளவில் தான் குறைந்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும்.
உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது. கச்சா எண்ணெயின் இப்போதைய விலையும், கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விலையும் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதே விலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய சந்தை விலை முறையே ரூ. 80.90, டீசல் ரூ.76.72 உள்ளது. ஆக எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா?
பெட்ரோல் மீது ஏற்கனவே 118 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல் விலையில் 13.04 ரூபாயும், டீசல் விலையில் 15.93 ரூபாயும் மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? இந்தத் தொகை நுகர்வோருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை.

நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என்றால் அந்தத் தொகை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், அப்படியும் அரசுகளுக்கு செல்லவில்லை. மாறாக, இவை எண்ணெய் நிறுவனங்களின் கருவூலத்தில் எந்தக் கணக்கிலும் இல்லாமல் சேருகின்றன.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்காததால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதைப் போலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இதனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடியை சட்டவிரோத லாபமாக குவித்து வருகின்றன.
தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் அரசு சேர்த்து வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
2014-16 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.
மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #PetrolDieselPrice
சென்னை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளும் தினமும் உயர்த்தப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே முடிவு செய்வதால், தங்களுக்கு இழப்பு ஏற்பட கூடாது என்று, அந்த விலை உயர்வை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தி விடுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2½ மாதங்களாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.92 காசு களாக விற்பனையானது.
சில பங்குகளில் பெட்ரோல் விலை 86 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோலை விட டீசல் விலைதான் கடந்த சில தினங்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் அதிகரித்தது.
இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.51-க்கு விற்பனையானது. சில இடங்களில் ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாயை எட்டி உள்ளது. #Petrolpricehike #dieselprice
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த விசைப் படகு மீனவர்களின் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விசைப்படகு மீனவர்கள் நலச்சங்க மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.முக. தலைவர் கருணாநிதி மற்றும் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கும், மறைந்த முன்னாள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும் இரங்கல் அனுசரித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
டீசல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டு எங்களது வாழ்வாதாரம் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் மீனவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற மீனவர்களுக்கு வழங்குகின்ற டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் சேதம் அடைந்து உள்ளன, நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொடுப்பது என்றும் முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இலங்கை அரசு அத்துமீறி 3 படகுகளை அரசுடமையக்கியதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதுபோன்ற நட்பு நாடுகளுக்கு உதவாத சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை முதல் கட்டமாக வேலை நிறுத்தம் செய்வது,
2-வது கட்டமாக அடுத்த மாதம் அக்டோபர் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, படகு உரிமை சான்றிதழ்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பது,
இதன்பிறகும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் 13 கடலோர மாவட்ட மீனவர்களும் இணைந்து போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சி துணையுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அரண்மனை முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், தி.மு.க. பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி முன்னிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று பெட்ரோல், டீசல் விலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.
பின்னர் ராமநாதபுரம் அரண்மணை பகுதியில் இருந்த கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் தி.மு.க.-காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அங்கு வந்த போலீசார் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம்,மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட வக்கில் பிரிவு தலைவர் அன்பு செழியன், மண்டபம் வட்டார காங்கிரஸ் தலைவர் மேகநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயற்சிக்கிறது.
2014 மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 காசுகள். தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி ரூ.19.48 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 காசுகள் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
2014-ல் மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் பதினொரு லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கின்றது. இது வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?

தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34, டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில் தான் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10-ல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வணிகப் பெருமக்களும், அரசு ஊழியர்கள், தொழிலா ளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FuelPrice #BharatBandh #Vaiko
டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டீசல் விலை தினசரி உயர்வு, 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 24-ந் தேதி பிரதமர், பெட்ரோலிய துறை, சாலை போக்குவரத்து துறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் ஜூன் 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம்.
நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், இன்று நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. நாங்கள் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போம். எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார்.