என் மலர்
நீங்கள் தேடியது "Petrol Price"
- இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலாகியுள்ளது.
- பிற எரிபொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
புதுச்சேரி:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
அண்ணாசிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் விக்கிரமாதித்தன், ரவீந்திரன், இந்திரஜித், பொதுச்செயலாளர்கள் புருஷோத், ஹரீஸ், செயலாளர்கள் கவுதம், கார்த்திக், மாவட்ட தலைவர் ஆனந்தவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி சைக்கிளில் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு வந்தனர். ஊர்வலம் நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால்நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். #Congress #PetrolPriceHike
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன்மாதம் கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.69 ஆகவும் டீசலின் விலை லிட்டர் ரூ.78.10 ஆகவும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike
அமராவதி:
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 ஆகவும், டீசல் விலை ரூ.75.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அமராவதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பலமே காரணம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி காரணமில்லை.

பணமதிப்பு நீக்கம் மிகப்பெரிய தோல்வியாகும். ஏனென்றால் மக்கள் இன்று வரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசின் தவறான கொள்கையால் கடந்த 1½ ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தால்தான் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்.
பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும். இது நாட்டை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #PetrolPrice
தற்போது தங்கத்தைப் போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தின.
இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடுசெய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 பைசாக்கள் உயர்ந்து ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், இந்த விலை உயர்வு அவற்றுடன் நின்று விடுவது இல்லை. சங்கிலித்தொடர்போல இவற்றின் விலை உயர்வு பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. #PetrolPrice

ஹைதியில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
நிலைமை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற்றது.
அதற்கான அறிவிப்பை அதிபர் ஜோவெனல் மோசி டி.வி.யில் அறிவித்தார். அதை தொடர்ந்து போராட்டம் கட்டுக்குள் அடங்கியது. #Haiti
பாட்னா:
பீகார் பா.ஜனதா துணை முதல்-மந்திரியும், ஜி.எஸ்.டி. குழுவின் தலைவரான சுஷில் குமார் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது.
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது தவறானது. சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் உள்ள மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரையறுக்கப்பட்ட அதிக பட்ச வரியைவிட கூடுதல் வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான். இது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான்.
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வருவதற்கான இறுதி முடிவு ஜி.எஸ்.டி. கவுன்சிலால் எடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி. அமைப்பு உறுதிபடும் வரை பெட்ரோலிய பொருட்களை வரம்புக்குள் கொண்டு வருவதில்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சுஷில் குமார் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். #Petrol #Diesel #SushilModi
பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது.
கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.
இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.
அந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.)
கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதால், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், விலை உயர்வில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்படும்போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு ரூ.15 சேமிக்கிறது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு 10 ரூபாய் கூடுதலாக வரி வைக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு பெட்ரோல் ஒவ்வொரு லிட்டருக்கும் ரூ. 25 கிடைக்கும். இந்த பணம் சராசரி வாடிக்கையாளருக்கு சொந்தமானது.
எனவே, லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும், ஆனால் இந்த அரசாங்கம் இதை செய்யாது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PetrolPrice #Chidambaram
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கர்நாடக தேர்தலையொட்டி சில நாட்கள் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.
அவ்வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதேசமயம், ஜூன் மாதத்திற்கான நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பு இல்லை என வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #RBI #petrol #diesel