search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம்.
    • விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றப்படும், வணங்கப்படும் பசும்பொன் தேவர் பெருமகனாரின் 116-வது பிறந்தநாளும், 61-வது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம்.

    ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி-சிதம்பரம் இடையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச்சாவடி திறக்கப்பட்டிருப்பதும், மேலும் ஒரு சுங்கச்சாவடி நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளதும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், விதிகளுக்கு முரணாக, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிது புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் அமைக்கப்படும் 4 வழிச்சாலைகளும், இரு வழிச்சாலைகளும் தனியார் மூலமாகத்தான் அமைக்கப்பட வேண்டும்; அதற்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மக்கள் நலன் கருதி சில சாலைகளை மத்திய அரசே அதன் சொந்த செலவில் அமைத்து, இலவச சாலைகளாக பராமரிக்கலாம். ஒவ்வொரு வாகனம் வாங்கப்படும்போது, அதன் விலையில் ஒரு பகுதி சாலைவரியாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலையில், சாலை மற்றும் கட்டமைப்புத் தீர்வையாக இப்போது முறையே ரூ.5, ரூ.2 வசூலிக்கப்பட்டாலும் கூட, இதற்கு முன் லிட்டருக்கு ரூ.18 வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் மூலம் கிடைத்த, கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைக்கலாம். இதுவே மக்களுக்கு பயனளிக்கும்.

    தேசிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் என்பது மக்களை கசக்கிப் பிழிவதாக இருக்கக்கூடாது. எனவே, தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள சுங்கச்சாவடிகளையும் 60 கி.மீ.க்கு ஒன்று என்ற அளவில் அரசு முறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தி.நகரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், ஆலோசனை வழங்கினார். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி மற்றும் கட்சியின் துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றி ஆலோசித்தனர்.

    முன்னதாக டாக்டர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவராக பொறுப்பேற்றதையொட்டி மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்துள்ளேன். அந்த வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அவரும் மனதார வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

    முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். சமூக பிரச்சினைகள் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    முக்கியமாக கிடப்பில் உள்ள நீர் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை அன்புமணி சந்தித்து வருகிறார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.

    நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான்.

    நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் அன்புமணி. அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.

    இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

    பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர்சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.  தீர்மானத்தை ஜி.கே.மணி வாசித்தார். தீர்மானம் வருமாறு:-

    தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது டாக்டர் ராமதாசால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.

    தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 1.1.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்  என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

    தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.

    அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழி நடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்கிறது என்றார்.

    இந்தத் தீர்மானத்தை வழிமொழியும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுப்பி ஆதரவளித்தார்கள்.

    இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

    அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.

    தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

    அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.

    பின்னர் தன்னை தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து டாக்டர் அன்புமணி ஏற்புரை ஆற்றினார். நிறைவாக டாக்டர் ராமதாஸ் சிறப்பு பேருரை ஆற்றினார்.

    தொண்டர்கள் மத்தியில் அன்புமணி பேசும்போது, புதியதோர் தமிழகம் செய்வோம் என்று சூளுரைத்தார். ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, இலவச தரமான கட்டாய கல்வி அளிப்பது, தரமான மருத்துவ வசதி அளிப்பது, 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவது, தொழில், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவையே எனது லட்சியமாக இருக்கும் என்றார்.

    பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) திருவேற்காட்டில் நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த பொதுக்குழுவில் அன்புமணி பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் பா.ம.க.வை தொடங்கினார். சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் வருகிறது.

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற யெரில் 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டும் வெற்றி பெற முடியவில்லை.

    இளைஞர் அணி தலைவராக இருக்கும் அன்புமணி எம்.பி. மத்திய சுகாதார மந்திரியாக இருந்தபோது நாடு முழுவதும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பெயர் பெற்றார்.

    சமீப காலமாக அன்புமணியின் ‘ஹைடெக்’ தேர்தல் பிரசாரங்களும், புள்ளி விவர பேச்சுக்களும் அரசியல் அரங்கில் அவரை பேச வைத்துள்ளது.

    தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை டாக்டர் ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் 20 மாவட்டங்களில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பா.ம.க.வின் முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ள அன்புமணியை கட்சியின் தலைவராக்கி தேர்தலை சந்தித்தால் ஆட்சியை பிடிப்பது எளிது என்று பா.ம.க.வின் அனைத்து மட்டத்திலும் கருத்து நிலவுகிறது. தொடர்ந்து நிர்வாகிகளும் டாக்டர் ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

    அன்புமணியின் செயல்பாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே கவனித்து வந்த டாக்டர் ராமதாஸ் திருப்தி அடைந்த நிலையில் இப்போதுதான் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நாளை நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணிக்கு தலைவர் பதவி என்பதே முக்கிய தீர்மானமாக கொண்டு வரப்பட உள்ளது.

    பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சென்னை திருவேற்காட்டில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கு சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார்.
    சென்னை:

    சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க. வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை போன்று தீவிரமாக பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘பா.ம.க. சிறந்த செயல் வீரர்கள் விருது’ கடந்த 2020-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பாராட்டு பத்திரம், ஒரு பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2021-ம் ஆண்டுக்கான பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுக்கு 5 பேரை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.

    பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சி, பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராம.முத்துக்குமார், பசுமை தாயகம் பொதுச்செயலாளர் அருள் ரத்தினம், கடலூர் முன்னாள் மாவட்ட தலைவர் தட்டானோடை செல்வராஜ் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

    மேலும் சமூக முன்னேற்ற சங்க தலைவர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மீ.கா.செல்வகுமார், மாநில துணைத்தலைவர் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், பா.ம.க. மகளிர் அணி மாநில தலைவர் நிர்மல் ராசா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.

    சென்னை திருவேற்காட்டில் நாளை (28-ந்தேதி) பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கும் சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார். 2022-ம் ஆண்டில் பா.ம.க. செயல்வீரர் விருதுகளை பெற அனைத்து நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மாவீரன் ஜெ.குருவின் தியாகத்தையும், வீரத்தையும் நாம் நெஞ்சில் நிறுத்துவோம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    என் நெஞ்சில் குடியிருக்கும், என் அன்புக்குரிய மாவீரன் ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று. கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள், அதிரடி நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வருகின்றன. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும் நாம் நெஞ்சில் நிறுத்துவோம்.

    காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் அனைவரும் அவரது நினைவை போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    35 ஆண்டுகளாக சிறையில் வாடிய வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன், அவரது உடல் நல பாதிப்புக்கு சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.

    மாதையன்

    மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனித நேயமற்ற அரசு எந்திரம் தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல டாக்டர் அன்புமணி ராமதாசும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருந்து நியாயவிலைக் கடை அரிசி மிகப்பெரிய அளவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் இயலாமையை அண்டை மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிருப்பது அரசுக்கு அவப்பெயர் ஆகும்.

    தமிழ்நாட்டில் நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

    அதற்கு பிறகும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது வினியோகத் திட்டத்தில் ஏதோ ஓட்டை உள்ளது என்று தான் பொருள்.

    அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும். அதைக் கடந்து ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

    ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழர்கள் முன்னேறவும், தமிழினம் தலை நிமிரவும் பாடுபட்டவர் சிபா ஆதித்தனார் என ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தினந்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 41-வது நினைவு நாள் இன்று. நாம் தமிழர்கள் என்ற உணர்வுடன் தமிழர்கள் முன்னேறவும், தமிழினம் தலை நிமிரவும் பாடுபட்டவர். இந்த உலகில் தமிழினம் வாழும் வரை சி.பா. ஆதித்தனாரின் புகழும், பெருமைகளும் பேசப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×