என் மலர்
நீங்கள் தேடியது "ஜிகே மணி"
- பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.
சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு 3 எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்திய நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
அப்போது, சட்டசபை குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
பா.ம.க. சட்டசபை குழு தலைவர், கொறடாவாக தாங்களே தொடர்வதாக ஜி.கே.மணியும் அருளும் சபாநாயகரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் பா.ம.க.வுக்கு வாழ்வு.
* பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது.
* ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.
* ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ்.
- சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.
திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:-
ராமதாஸ் அவர்கள் ஐசியுவில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஆஞ்சியோகிராம் செய்யும்போது கூட அவருக்கு மயக்க மருத்து செலுத்தவில்லை. ஐயாவிடம், உங்களது இதயம் எப்படி துடிக்கிறது என்று பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறினர்.
அவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அதனால், அவர் ஐசியுவில் இல்லை. அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் நலம் விசாரித்தனர்.
பெரும்பாலான தலைவர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தனர். வர முடியாதவர்கள் போனில் பேசி நலம் விசாரித்தனர்.
சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.
அதனால், யாரையும் மருத்துவமனைக்கு வந்து ராமதாஸ் அவர்களை பார்க்கும்படி வற்புறுத்தவில்லை. இது அன்புமணி கூறும் அபாண்டமா பொய். இவ்வாறு கூறுவது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும்.
- டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட உறுப்பினர் கார்டிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவர் எப்படி செயற்குழுவை கூட்ட முடியும். மாமல்லபுரத்தில் கூட்டிய கூட்டம் செல்லாது. தேர்தல் ஆணையம் தி.நகர் முகவரிக்கு கடிதம் அனுப்பியது, முகவரி மோசடி காரணமாக என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அன்புமணி மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதற்கு அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:-
முகவரி மோசடி என்கிறார். திடீரென்று நேற்றுதான் தெரிந்தது என்கிறார் ஜி.கே. மணி. 25 வருடம் கட்சியின் தலைவராக இருந்தவர். சட்டசபை மற்றும் பொது வெளியில் கட்சியாக பேசியவர். அவர் இப்படி அபாண்டமாக பேசுவது கவுரவ தலைவருக்கு கவுரவமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அன்புமணி ராமதாஸ் தலைவராக 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட பிறகு, ஜூன் 1ஆம் தேதி தி.நகருக்கு தலைமை அலுவலகத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து விட்டோம். அதில் இருந்து தி.நகர் திலக் தெருதான் தலைமை அலுவலகமாக இருந்து வருகிறது.
அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் பாமக உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.
தேர்தல் ஆணையம் சார்பில் பல வருடங்களாக தி.நகர் முகவரிக்குதான் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ, நேற்றுதான் திடீரென தெரிந்தது போன்று, பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதில் அலுவலகம் முகவரியை மாற்றிவிட்டதாக கூறும் குற்றச்சாட்டும் ஒன்று. இது நேற்றைய செய்தி அல்ல. ஒரு பழைய செய்தி.
அலுவலகம் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும். 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என்றால், தைலாபுரத்தில் உறுப்பினர் அட்டை சேர்க்கையின்போது ஜி.கே. மணி தூக்கிப் பிடித்த கார்டில் தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?. 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என இப்போது சொல்பவர், தைலாபுரம் என மாற்றி எப்படி செய்தி வெளியிட முடியும்.
இவ்வாறு பாலு தெரிவித்தார்.
- அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது.
- தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது.
பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?. கட்சியின் அமைப்பு விதி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையும் செயல்படக் கூடாது எனக் கூறுகிறது.
விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்?. மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. அதில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியும் செல்லாது.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது. 29ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக்க வேண்டும் எனக்கூறி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ராமதாஸ் நிறுவனர் மற்றும் தலைவர் என அழைக்கப்படுகிறார். செயற்குழு நிர்வாகக்குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்பின் மாநில பொதுக்குழுவில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவை முழுமையாக அங்கீகரிக்கிறது.
தலைவர் என்று கடிதம் எழுதுவது மக்களை திசை திருப்புவதற்கான நாடகம். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரி மாற்றி, தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இது மோசடி என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலமாகவே தேர்தல் ஆணையம் கடிதம் அங்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் எனக் கூறுவது மோசடி.
இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
- டாக்டர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
- மருத்துவமனை தரப்பில் அவரது உடல் நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தருமபுரியில் நேற்று இரவு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று நெஞ்சு வலிப்பதாகவும், முதுகு தண்டு வலியாலும் அசவுகரியப்பட்டார்.
உடனடியாக டாக்டர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் வானகரம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். மருத்துவமனை தரப்பில் அவரது உடல் நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
- ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
- பாமகவை விமர்சித்து அமைச்சர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேடையில் பேசினார். அப்போது, ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
"ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு" என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரனை வைத்துக் கொண்டு பாமகவை கிண்டல் செய்யும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவில் ராமதாஸ் அணியினரின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியிடம், "அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அப்போது அவர்," அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்" என ஜி.கே.மணி பதில் அளித்துள்ளார்.
- இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது.
- இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமில்லை.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்ள பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. வில் ஏற்பட்ட குழப்பதால் கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை மனஉளைச்சலில் உள்ளோம். இது மாற வேண்டும். இருவரும் மாறி மாறி பேசினால் குழப்பம் தான் ஏற்படும். டாக்டர் ராமதாசும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து மனம் விட்டு பேசி தீர்வு காண வேண்டும்.
இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது. பா.ம.க. பழைய நிலைக்கு வீறுகொண்டு எழவேண்டும். இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
- பாமக எம்.எம்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
- பாமக கௌரவத் தலைவரும் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ளட்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி நாளை நாளை சேலம் மற்றும் தருமபுரி செல்ல இருக்கும் நிலையில் இரு தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தீர்த்து வைக்க ஜி.கே. மணி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும்.
- நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் ஆசை எல்லாம் ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். நேற்று அன்புமணி ராமதாஸ் சொல்லி இருக்கிறார். அதை நாங்கள் மறுக்கவில்லை, இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழல் உருவாகும் என நினைக்கிறோம். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வது கட்சிக்கு பலமாக இருக்கும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நேற்று பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்டபோது, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.
- ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
- பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் யாரும் வர மாட்டார்கள் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியதால் இன்று இங்கு வந்துள்ளேன்.
பா.ம.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வு கவலை அளிக்கிறது. ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் சுமூக முடிவு எட்டப்படும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.






