என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் ராமதாஸ்"

    • சட்டமன்ற உறுப்பினர் அருளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
    • என்னுடன் உள்ள பா.ம.க.வினரை அழித்து ஒழிக்க அன்புமணி தமிழகத்தில் வன்முறையை தூண்டி வருகிறார்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரா.அருள் காலை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் (கி) பா.ம.க ஒன்றிய செயலாளர் சத்தியராஜின் தந்தை இறப்பு செய்தியை அறிந்து வடுகதத்தம் பட்டி கிராமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லையான மத்தூர் தரைப்பாலத்தில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் தலைமையில் அன்புமணி ஆதரவு சட்டவிரோத கும்பல் ஒன்று கத்தி, இரும்பு பைப்புகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவருடன் வந்த கட்சியினரின் 5 கார்களை வழிமறித்து, "மருத்துவர் அன்புமணி வாழ்க" என்று கோஷம் எழுப்பி கொண்டு "அய்யாவுடன் சேர்ந்து கொண்டு அன்புமணி அண்ணனுக்கு எதிராகவே அரசியல் செய்கிறீர்களாடா.." என்றும் முழங்கியவரே கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து, நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    குறிப்பாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளை குறி வைத்து கொலை செய்ய வேண்டும் என ஜெயப்பிரகாஷ் ஒரு கல்லை தூக்கி வந்து "அன்புமணி அண்ணன்தான் உன்னை அடித்து கொலை செய்ய சொன்னார்" என்றும், "இனிமேல் அன்புமணி அண்ணனை எதிர்ப்பவர்களுக்கும், அய்யாவுடன் இருக்கும் ஆட்களுக்கும் இதே கதிதான் என கூறி உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்" என்றும். கூறிக்கொண்டே கொலை செய்யும் நோக்கத்துடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் தலையில் அடிக்க முற்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தை காவல்துறையை சேர்ந்தவர்கள் நேரில் பார்த்து உள்ளனர். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல் ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த இந்த தாக்குதல் நிகழ்வு கடுமையான கண்டனத்துக்குரியது.

    கடந்த சில நாட்களாக சேலம், அரியலூர், தர்மபுரி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் அன்புமணி பலரை தூண்டிவிட்டு என்னையும், என்னுடன் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வன்முறையை தூண்டி விட்டு மோதல் போக்கை உருவாக்கி வருகிறார்.

    வன்முறையை தூண்டுபவர்களை அன்புமணி உற்சாகப்படுத்தி, பாராட்டி பொறுப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் அன்புமணியின் தூண்டுதலின் பேரில் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அதில் சிலர் கடுமையாக தாக்கப்பட்டும் வருகின்றனர்.

    இவ்வாறு அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மீதான தாக்குதலுக்கும், கலவரத்திற்கும் காரணம் அன்புமணியின் நடைபயணம்தான்.

    அன்புமணி நடைபயணம் என்ற பெயரில் என்னை அவமானப்படுத்தி, என்னுடன் உள்ள பா.ம.க.வினரை அழித்து ஒழிக்க வேண்டும் என திட்டமிட்டு அமைதியாக உள்ள தமிழகத்தில் வன்முறையை தூண்டி வருகிறார்.

    எனவேதான் இந்த நடை பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே, 'நடைபயணம் என்ற பெயரில் கலவரங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர், மோதல் சம்பவங்கள் நடைபெறும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காவல்துறைக்கு உரிய தகவல் கொடுத்தோம். அதை ஏற்காமல் காவல்துறை நடைபயணத்திற்கு அனுமதி வழங்கியதே இந்த மோதல் சம்பவங்களுக்கு காரணம்.

    அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவரமாக்கும் நோக்கத்தில் செயல்படும் அன்புமணியின் நடைப்பயணத்திற்கு இனியும் அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும். காவல்துறை இவற்றை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    அன்புமணியுடன் இருக்கும் கும்பலின் நடவடிக்கைகளால் தொண்டர்களும், மக்களும் அவர்கள் மீது நம்பிக்கையற்று, அவருக்கு எதிராக உண்மையான பாட்டாளிகளாக அணி திரண்டு என்னிடம் வருகிறார்கள்.

    என்னுடன் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்களை தம்பக்கம் இழுக்க பல்வேறு வலைகளை வீசியும், ஆசைவார்த்தைகள் கூறியும் இயலாமல் போன விரக்தியின் வெளிப்பாடாக தற்போது கட்சி நிர்வாகிகள் மீது ரவுடிகளை வைத்து தாக்குதல்களை கட்ட விழ்த்து விட்டுள்ளார்.

    "டீசன்ட் அன்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ்" என்று, நாகரிக அரசியல் செய்வதாக மேடைக்கு மேடை போலியான வார்த்தைகளால் முழங்கி வரும் அன்புமணி தற்போது அநாகரிகமான அரசியலையும், வன்முறை அரசியலையும் கையில் எடுத்துள்ளார்.

    சட்டமன்ற உறுப்பினரான அருள் மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர்களாக செயல்பட்ட அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் அருளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சுதந்திரமாக மக்கள் பணி செய்வதற்கும் ஏதுவாக அவருக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய குழு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

    அத்துடன், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இம்மாதிரியான, மோசமான சம்பவங்கள் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் அன்புமணியே திட்டமிட்டு, தூண்டுதலை செய்ததே இந்த சம்பவத்திற்கு காரணம்.

    இவ்வாறு திட்டமிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, என்னுடன் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
    • டாக்டர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு முழுநேர பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீப காலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் பாமக-வினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

    மருத்துவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமக-வின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.

    எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலி பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அருள் எம்.எல்.ஏ. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும்...
    • பெண்கள் இல்லாமல் குடும்பமோ- நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும் இந்த மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ள, வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம்- குடும்பமாய், அணி, அணியாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன்.

    பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், பெண்கள் இல்லாமல் குடும்பமோ- நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும் இந்த மகளிர் மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.

    கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற மண்ணில் வன்னியர் சங்கம் சார்பில் என்னுடைய தலைமையில் நடைபெறுகிற இந்த பிரம்மாண்டத் திருவிழாவில் பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே, சகோதரிகளே உங்களை பாசத்தோடு எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து நான் அங்கே காத்துக் கொண்டிருப்பேன்.

    உங்கள் வீரமும், எழுச்சியும் நிரம்பிய பாசத்திருமுகங்களை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் வருகையால் நான் மகிழவும், என்னைப் பார்த்து நீங்கள் மகிழவும் இந்தநாள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.

    பெண்களுக்கு எல்லா நிலையிலும் பாதுகாப்பு, சம உரிமை, கல்வியிலும், வேலையிலும் முன்னுரிமை, குழந்தைகள் நலன், மது- போதைப் பொருள்கள் ஒழிப்பில் தீவிரம், முழுமையான சமூகநீதி போன்ற எண்ணற்ற நலன்களை போற்றும் பிரகடனங்களை மாநாட்டில் முன் மொழிவதோடு அவற்றை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்வது எப்படி என்கிற திட்ட வடிவத்தையும் மாநாட்டில் பேசுவோம், செயலாற்றுவோம்.

    முக்கியமாய் பெண்கள் உணர வேண்டிய ஒன்றாக, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை முழுமையாய் வென்றெடுக்க, மகளிர் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. அது எப்படி என்பதையும் என் சகோதரிகளுக்கு மாநாட்டில் விளக்கப் போகிறேன். அதேபோல் அனைத்து சமூகத்தவருக்குமான உரிய இட ஒதுக்கீடு, சாதி வாரியான கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் பேசுவோம்.

    கண்ணகி- கோவலன் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகம், அன்றைய நாளில் பூம்புகார் மண்ணில் நடக்கவுள்ளது என்பதையும்; மகளிர் பெருமளவு பங்கேற்கும் வீரதீர சாகச கலை நிகழ்ச்சிகளும் அன்றே நடைபெறவுள்ளது என்பதையும்; தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க.வினரும், வன்னியர் சங்க நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும்; மாநாட்டு மேடையை நோக்கி வருவீர்கள் என்று உறுதிபட நம்புகிறேன்.

    தமிழ்நாடே திரும்பிப் பார்த்திடவும், "ஆகா, இதுவன்றோ, மகளிர் மாநாடு" என்று வியந்து நிற்கவும்; இந்த மாநாட்டை ஒரு அடையாள மாநாடாகவே நடத்திக்காட்டப் போகிறோம். அதை செய்து முடிக்கப் போவது ராமதாசு ஆகிய நான் அல்ல; நீங்கள் தான்; மகளிர்தான்; மகளிரை முழுமையாக கொண்டாடி, மகளிரை போற்றி, மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்கும் ஒரே விழா; இந்த விழாதான்.

    விரைந்தும், மகிழ்ச்சியுடனும், பூம்புகார் வருவீர்; அங்கே நாம் சந்திப்போம்; நம்முடைய வெற்றிகளுக்கான புதிய பாதை குறித்து கூடி சிந்திப்போம்; பேசி முடிவெடுப்போம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • 7 பாடல்களை பாமக சார்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலை பா.ம.க வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த முதல் பாடல் அன்புமணியை முன்னிலைப்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸை முன்னிலைப்படுத்தி அடுத்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    மே 11ம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 7 பாடல்களை பாமக சார்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், சித்திரை முழுநிலவு மாநாடு 2ம் பாடலை பாமக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு.
    • தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கேரியர் என்ற உலகின் முன்னணி குளிரூட்டி நிறுவனம் அதன் உற்பத்தி மையத்தை சென்னை புறகரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திர அரசுடன் விரைவில் கையெழுத்திடவுள்ளது.

    அதேபோல், தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் தென்னிந்தியாவில் ரூ. 5000 கோடி மதிப்பில் அதன் முதல் உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை விட ஆந்திரத்தில்தான் முதலீட்டு சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறி அங்கு முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. அதனால், அதற்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் 6 நிறுவனங்களும் ரூ.2000 கோடி மதிப்பிலான தங்களின் உற்பத்தி ஆலைகளை ஸ்ரீசிட்டியில் அமைக்க முடிவு செய்துள்ளன.

    தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஆந்திரத்தில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால்தான் இந்த நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள் அதற்கான அரசின் அனுமதியையும், ஒப்புதலையும் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அவை உண்மை என்பதை தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய இரு முதன்மை நிறுவனங்களும், 6 துணை நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்றிருப்பது காட்டுகிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது.

    எனவே, பயனற்ற செய்வதை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
    • பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.

    துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
    • தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கடுமையான பணியை நீங்கள் பாருங்கள்.

    நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பா.ம.க. நிறுவனம் டாக்டர் ராமதாஸ், கூட்டணி அமைத்துதான் போட்டி எனத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-

    * மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் வரும் மக்களை தேர்தலில் 10 இடங்களை நம்மால் வெல்ல முடியும். அதற்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில்  60-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல முடியும்.

    * மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    * தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கடுமையான பணியை நீங்கள் பாருங்கள்.

    * கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட நாம் குறைந்தது ஏழு இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    * உங்களது விருப்பத்தின்படி தனித்து போட்டியிட தற்போது தயாராக இல்லை.

    • நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைவது காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது.
    • மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்வதற்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 12,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன. நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    செஞ்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைவது காலம் காலமாக நிகழ்ந்து வருவதால், எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகளைத் தடுக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 10,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படுவதையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுத்த நாளே அரவை நிலையங்களுக்கோ, மண்டல அளவிலான கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
    • தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொடடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பே ரவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்று வது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன்.

    வன்னியர்களுக்கு தமிழகத் தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடந்த போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.

    அப்போதும் கொலைப் பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தி யாகம் செய்தனர்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகு தியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ம் நாள் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

    இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னி யர்களுக்கான இட ஒதுக் கீட்டை வென்றெடுக்க விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான்.

    எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
    • சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
    • கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை பரிந்துரை வழங்கியும் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

    ஒரே நிலையிலான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு சம ஊதியம், சம பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது ஆகும்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர்களாக சேருபவர்களுக்கு, மருத்துவத் துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.

    அவர்கள் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதனால், பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாத கால்நடை உதவி மருத்துவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலையில் பணி ஓய்வு பெற வேண்டியுள்ளது. இது பெரும் அநீதி ஆகும்.

    மருத்துவத்துறை மருத்துவர்களைப் போலவே தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் பணியில் சேர்ந்த 8, 16, 24 ஆகிய ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், சில காரணங்களால் அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் சில திருத்தங்களைச் செய்து செயல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்புத் துறை பரிந்துரை வழங்கியது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் அந்த பரிந்துரையை தமிழக அரசின் நிதித்துறை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

    கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்குவதை தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்கள் நியாயமற்றவை. அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல் மருத்துவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களுக்கு 8, 15, 17 மற்றும் 20-ஆம் ஆண்டுகளில் நான்கு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது நியாயமல்ல.

    தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை பராமரிப்புத் துறையின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×