search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive care"

    • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

    கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார்.
    • கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தம்போட், அமிர்தா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 42). அதே ஊரை சேர்ந்தவர் சந்திரன் (43), இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு, மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார். அதற்கு சந்திரன் நீ முன்னே செல், நான் பின்னாடி வருகிறேன் என கூறியுள்ளார். இதனால், அதே ஊரைச் சேர்ந்த ராஜம் (38) என்பவரை அழைத்துகொண்டு, கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திரு.பட்டினம் பிராவிடையான் ஆறு அருகே, காலை 4.15 மணிக்கு சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த பால் வாண்டி (மினிவேன்) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், இருவரும் சாலையில் தூக்கியெறியப்பட்டு, தலை, கை, கால் முகம் என படுகாயம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரன், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கவுதமன் இறந்து போனார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய, நன்னிலம் திருகொட்டாரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோதிபாசு (34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • பழனி கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
    • சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீராம் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்ட வட்டம் கீழ்குப்பம்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ஸ்ரீராம் (வயது 15). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு படுத்து உறங்கியபோது, ஸ்ரீராமை பாம்பு கடித்துள்ளது. இதில் அலறி துடித்த மாணவனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மாணவன் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பாம்பு கடித்து மாணவன் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.எஸ்.எஸ் ., காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா.இவர்களுக்கு திவ்யா மற்றும் பிரசன்னா என்ற குழந்தைகள் உள்ளனர்.மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மல்லிகா தனது கணவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இந்தநிலையில் மல்லிகாவை தீக்காயத்துடன் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் மல்லிகா மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் கூறினார்.அதை மறுத்த மல்லிகா தனது கணவர் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்ததாக கூறினார்.இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லிக்குப்பத்தில் சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.
    • போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.வழக்கம் போல இன்று காலையில் அவர் பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் தூக்க மாத்திரை அதிகளவில் விழுங்கியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரையை ஏன் விழுங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா விழுப்புரம் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை முயற்சி செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போதே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
    • புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் சாய். தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்றுமாலை தேவேந்திரனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.

    அப்போது சாய் தனது வீட்டின் பால்கனியில் உள்ள கேட்டை திறந்து வெளியில் இருந்த சிறிய தூணில் நின்று ஒளிந்து கொள்ள இறங்கினார்.

    இதில் கால் தவறி அவன், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மண் எடுத்துக் கொண்டு செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடப்பதை ஒட்டி வசதிகளை மேம்படுத்துவதற்காக அதே ஊரைச் சார்ந்த குணசேகரன் (வயசு 22) டிராக்டர் டிரைவர் ஆவார். அவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் இருந்து மண் எடுத்துக் கொண்டு அங்குள்ள சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .

    இதில் டிரைவர் குணசேகரன் பலத்த காயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக குணசேகர் இறந்தார். தகவல் அறிந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

    • தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாக மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் மாணவி சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை பெற்றோர் பலமுறை கண்டித்தனர். ஆனாலும் அந்த மாணவி அதனை கண்டு கொள்ளாததால் நேற்று இரவு பெற்றோர் மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி வீட்டின் 3-வது மாடியில் இருந்து நேற்று இரவு கீழே குதித்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு உடைந்ததால் கதறினார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்.

    பின்னர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், காதல் பிரச்சனை மற்றும் மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாகவும், இதனால் அவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, நோயா ளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 8 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 1,000 முதல் 2,000 வரை புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 8 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, முற்றிலும் குளிரூட்ட ப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 

    பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா, தஞ்சை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து தீவிர சிகிச்சை பிரிவை நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இந்த தீவிர சிகிச்சை பிரிவில் ஒவ்வொரு படுக்கை க்கும் வெண்டிலேட்டர்கள், அனைத்து உறுப்புகளையும் கண்காணிக்கும் கருவியான மல்டி பாரா மானிட்டர், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், உயிர்காக்கும் திரவங்களை ஏற்றும் கருவிகள், இசிஜி வசதி என அனைத்தும் உள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

    இந்த தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் செயல்படுவார்கள் என்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

    ×