search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடலூர் அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம்:  அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் மாலை  அடிக்கல் நாட்டுகிறார்,
    X

    அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் .

    கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம்: அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் மாலை அடிக்கல் நாட்டுகிறார்,

    • அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

    Next Story
    ×