என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீவிரசிகிச்சை"
- தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார்.
விக்கிரவாண்டி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது40), சுப்பிரமணி (60) ஆகியோர் ஏற்கனவே தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின் (21), ஜெகதீஸ்வரன் (24) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே உள்ள ஆரியரில் நடந்த ஒரு விசேஷத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளனர் .
அப்போது தேவபாண்டலத்தில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர்சொந்த ஊருக்கு வந்து விட்டனர். அன்றில் இருந்து வாந்தி, மயக்கத்தில் இருவரும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை கண்எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனே முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
தேசிய ஆதி திராவிடர் நல ஆணையர் ரவி வர்மன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது விழுப்புரம் ஆர்டிஓ., ஷாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கூறும்போது, `நாங்கள் நண்பர்களுடன் உறவினரின் விசேஷத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள அரியூர் சென்று விட்டு அங்கு தேவ மண்டலம் என்ற இடத்தில் சாராயம் வாங்கி குடித்தோம்.
பின்னர் ஊருக்கு வந்தவுடன் அன்று இரவில் இருந்தே வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம் என கூறினார்.
- மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.எஸ்.எஸ் ., காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா.இவர்களுக்கு திவ்யா மற்றும் பிரசன்னா என்ற குழந்தைகள் உள்ளனர்.மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மல்லிகா தனது கணவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இந்தநிலையில் மல்லிகாவை தீக்காயத்துடன் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மல்லிகா மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் கூறினார்.அதை மறுத்த மல்லிகா தனது கணவர் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்ததாக கூறினார்.இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள
- விவசாயிகள் மீது மலை தேனீ கொட்டி யதில் 5 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கலாவதி (வயது 20). இவர் மாடு ஒட்டிக் வரும் வழியில் லட்சுமிபதி என்ப வரது நிலத்தின் அருகே மலைத்தேனீ கொட்டியது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் சே.கொளப்பாக்கம் கிராமத்தில் விவசாயிகள் மீது மலை தேனீ கொட்டி யதில் 5 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விக்கிரவாண்டியை அடுத்த செ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி (வயது 20). இவர் மாடு ஒட்டிக் வரும் வழியில் லட்சுமிபதி என்ப வரது நிலத்தின் அருகே மலைத்தேனீ கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் கலாவதி சத்தம் போட்டார். அப்போது அதே பகுதியில் விவசாய வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய பாபு (50), கிருஷ்ணமூர்த்தி (55), வெற்றிவேல் (29), முனியன் (50), அம்பிகா (50) ஆகியோர் கலாவதியை காப்பாற்ற முயற்சித்தனர். இதில் அவர்களையும் மலைத் தேனீ கொட்டியது. இதையடுத்து இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்