search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counterfeiting"

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வர கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 53) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பனை செய்வ தாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலை மையிலான போலீசார் வரகூர் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீரன் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீ சார் வீரனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கல்வராயன்‌ மலைப்பகுதியில்‌ இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்‌ அதிக அளவில்‌ காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
    • இதையடுத்து ஆத்தூர்‌ டி.எஸ்.பி.‌ நாகராஜ்‌ தலைமையில்‌ தனிப்படை அமைத்து மணிவிழுந்தான்‌ பகுதியில்‌ போலீசார்‌ சாராய வேட்டையில்‌ ஈடுபட்டனர்‌.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

    மேலும் அங்கு காயச்சப்படும் கள்லச்சாராயத்தை லாரி டியூப்புகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து தலைவாசல் நத்தக்கரை, மணிவிழுந்தான், ராமசேசபுரம், சார்வாய்புதூர், மணிவிழுந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாகவும் ரகசிய தகவல் வந்ததது.

    இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்த போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மணிவிழுந்தான் அருகே ராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 35) சேகர்( 36) மோகன் (37) என்பதும்

    அவர்கள் சாக்கு மூட்டை யில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் 3 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான 3 பேரையும் போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது.

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி, இன்று டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக அமைப்புச் செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன் வரவேற்றார்.

    மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் திருப்பனந்தாள் தெற்கு பாரதிமோகன், துணைச் செயலாளர்கள் தவமணி, இணை செயலாளர் இளமதி சுப்பிரமணியன், பொருளாளர் கண்ணபிரான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயலாளர்கள் திருவிடைமருதூர் வடக்கு அசோக்குமார், திருவிடைமருதூர் தெற்கு முத்துகிருஷ்ணன், திருப்பனந்தாள் வடக்கு கருணாநிதி, பாபநாசம் மேற்கு கோபிநாதன், பொற்றாமரை குளம் பகுதி செயலாளர் பத்ம. குமரேசன், மகாமககுளம் பகுதி செயலாளர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    மயிலாடுதுறை : இதைபோல் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

    நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் அபிராமி திடலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளரும், வேதராண்யம் எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நாகை அ.தி.மு.க. நகர கழக செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    திருவாரூர்: இதைப்போல் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் கட்சி அமைப்பு செயலாளர் கோபால், சிவா, ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் போலீசார் செய்திருந்தனர்

    • கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம்.
    • அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கள்ளச் சாராயம் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் தடுப்பது மட்டுமின்றி கண்காணித்து வர வேண்டும். மேலும் அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுதுறை ஆகிய துறை களின் அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் காவல் துறையினரும்,வருவாய் துறை யினரும் ஒருங்கி ணைந்து கிராமப்பகுதிகளில் நாள்தோறும் கண்காணித்து வருவதுடன், பொது மக்களுக்கு கள்ளச்சாரா யத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அதே போல் பொது மக்களும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் அரசுமதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அரசுஅனுமதித்த நேரங்களில் மட்டும் செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி அரசு நிர்ணயித்த விலையில் மனதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். இதைகாவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவ லர்கள் கொண்ட குழு நியமித்து அவ்வப்போது ஆய்வு செய்து தவறு செய்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், தாசில்தார்கள் செம்பக லதா, ராஜகுரு மற்றும் அரசுஅலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் தமிழக அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க முன்வரவில்லை என்றார்.

    தொடர்ந்து, வேதாரண்யம் பகுதியில் கடந்த அ.தி.மு.க அரசின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை குறித்து பட்டியலை படித்து காண்பித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
    • லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.      அப்போது போலீசாரை கண்டதும் 2 மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது.

    இதனை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்திலேயே அழித்தனர். தொடர்நது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
    • இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருேக உள்ள சாத்தப்பாடியை சேர்ந்த சாராய வியாபாரி கண்ணன் மகன் தனபால் (வயது 30).

    15 வழக்குகள்

    இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குள் உள்ளது. குறிப்பாக கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் என 15 வழக்குகள் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் உள்ளது.

    இந்த நிலையில் தனபால் தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார், அவரை கைது செய்வதற்காக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் பிடிபடாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார். இதனால் தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடிக்க வியூகம் வகுத்து சாத்தப்பாடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    110 லிட்டர் சாராயம் பறிமுதல்

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனபால் சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ேபாலீசார், தனபாலை கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ஜெயிலில் அடைப்பு

    பின்னர் அவரை, பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்று ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
    • கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கேட்டறிந்து 31 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நாகை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கீதா, நகர இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தியாகராஜன், சிவராமன், ஆனந்தராஜ், பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×