search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர்(பயிற்சி) நாராயணசர்மா மற்றும் பலர் உள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம்

    • கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம்.
    • அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கள்ளச் சாராயம் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் தடுப்பது மட்டுமின்றி கண்காணித்து வர வேண்டும். மேலும் அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுதுறை ஆகிய துறை களின் அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் காவல் துறையினரும்,வருவாய் துறை யினரும் ஒருங்கி ணைந்து கிராமப்பகுதிகளில் நாள்தோறும் கண்காணித்து வருவதுடன், பொது மக்களுக்கு கள்ளச்சாரா யத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அதே போல் பொது மக்களும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் அரசுமதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அரசுஅனுமதித்த நேரங்களில் மட்டும் செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி அரசு நிர்ணயித்த விலையில் மனதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். இதைகாவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவ லர்கள் கொண்ட குழு நியமித்து அவ்வப்போது ஆய்வு செய்து தவறு செய்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், தாசில்தார்கள் செம்பக லதா, ராஜகுரு மற்றும் அரசுஅலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×