தலைவாசல் அருகேகள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் அதிரடி கைது

கல்வராயன்‌ மலைப்பகுதியில்‌ இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்‌ அதிக அளவில்‌ காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆத்தூர்‌ டி.எஸ்.பி.‌ நாகராஜ்‌ தலைமையில்‌ தனிப்படை அமைத்து மணிவிழுந்தான்‌ பகுதியில்‌ போலீசார்‌ சாராய வேட்டையில்‌ ஈடுபட்டனர்‌.
தலைவாசல் அருகேகள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் அதிரடி கைது
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.

மேலும் அங்கு காயச்சப்படும் கள்லச்சாராயத்தை லாரி டியூப்புகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து தலைவாசல் நத்தக்கரை, மணிவிழுந்தான், ராமசேசபுரம், சார்வாய்புதூர், மணிவிழுந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாகவும் ரகசிய தகவல் வந்ததது.

இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்த போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மணிவிழுந்தான் அருகே ராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 35) சேகர்( 36) மோகன் (37) என்பதும்

அவர்கள் சாக்கு மூட்டை யில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் 3 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான 3 பேரையும் போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com