search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loss of life"

    • வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை.
    • குழந்தை படுக்கையில் இறந்த நிலையில் இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சியாத்தமங்கை ஊராட்சி, மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மாரிமுத்து (வயது 35) கூலித்தொழிலாளி.

    இவருக்கும் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் தட்டாத்திமூலை பகுதியை சேர்ந்த தீபா (வயது 30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி ருத்ரா (வயது 4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மாரிமுத்து தீபாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தீபா தனது குழந்தை ருத்ராவுடன் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி தீபாவை சமா–தானம் பேசி அழைத்து வர மாரிமுத்து சென்றுள்ளார். தீபா வர மறுத்ததால் குழந்தை ருத்ராவை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை தனது தாயரிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மாரிமுத்து திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும் அங்கு வந்து குழந்தையை தருகிறேன் எனக்கூறி உள்ளார்.

    இதையடுத்து தீபா திருமருகலுக்கு வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் இல்லை.

    இதையடுத்து தீபா ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்த–போது மாரிமுத்து தூக்கில் தொங்கியபடியும், குழந்தை படுக்கையில் இறந்த நிலையிலும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா சத்தமிட்டு அலறினார்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் மாரிமுத்து, ருத்ரா ஆகியோரின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து மாரிமுத்துவின் தந்தை ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது குழந்தை தனது தாயிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாலும், மறுபக்கம் மாரிமுத்துவின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததாலும் ஆத்திரத்தில் குழந்தையை துணியால் முகத்தை மூடி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தனர்.

    குடும்ப தகராறில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி.
    • கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென இந்த கட்டிடம் இடியத் தொடங்கியது.

    மேலும் அதன் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விழுந்தன. சிறிது நேரத்தில் கட்டிடத்தில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.இதற்கிடையே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட 25வது வார்டு கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி உடனடியாக இதுகுறித்து கிழக்கு போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். இதையடுத்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்றது.

    இரவு நேரம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகியது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் கீழ ராஜ வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது 32) சமையல் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    அதனை கண்ட ராஜேஷ் மகன் ருத்ரன் தனது தாத்தா சேகர் இடம் கூறியுள்ளான்.

    உடன் சேகர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த ராஜேஷை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் ராஜேஷ்ன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பள்ளிக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் 2 அடித்தளமும் சேதமுற்று சாயும் அபாய நிலையில் உள்ளது.
    • குளத்தின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளதால் அது சாயும் பட்சத்தில் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி பருத்திச்சேரியில் மணலி ஊராட்சிக்கு சொந்தமான பள்ளிக்குளம்அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அம்மின்மாற்றியின்2 அடித்தளமும் சேதமுற்று சாயும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த பள்ளிக்குளம் இரண்டு படித்துரைகளை கொண்டிருப்பதால் பொதுமக்கள் எந்நேரமும் அக்குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.குளத்தின் சில அடித்தூரத்தில் மின்மாற்றி அமைந்துள்ளதால் அது சாயும் பட்சத்தில் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×