search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lightning"

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது.
    • வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மருங்கால்புரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமுதமலர் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கியதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜோன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அப்போது, மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலரின் உறவினர்களிடம் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.

    அப்போது புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரீஸ்வரி, புதூர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41).

    இவரது தம்பி செல்வமணி.(40), மகன் தஷ்விந்த் (20). இவர்கள் 3 பேரும் தமிழ்மணிக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென இடி மின்னல் படகை தாக்கியது. இதில் படகை இயக்கிய தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார்

    கடலூர்:

    பண்ருட்டி தனபால் செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர், பண்ருட்டி காந்தி ரோட்டில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் பண்ருட்டியை அடுத்த பணிகன்குப்பம் பகுதியில் வரும்போது மழை பெய்தது. இதனால் மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார். அப்போது பயங்கர சத்தத்து டன் இடி இடித்து மின்னல் மின்னியது.இதில் செந்தில்குமார் மீது மின்னல் தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்ததிடீர் மழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள்ஊர்ந்து சென்றனர். இந்ததிடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
    • அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.

    ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்துள்ளது. மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
    • இறந்தோர் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

    ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால், கிஷன்கஞ்ச், கைமூர், வைஷாலி, ஷிவன், பாட்னா, அராரியா, ஷரண் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர்.

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார்.
    • ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர்.

    உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உஷைத் நகரில் நடந்த மற்றொரு மின்னல் சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர். மேலும், மூன்று பேர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.

    திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

    ரேபரேலியின் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமகாந்தி (38) மின்னல் தாக்கி இறந்தார். மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தில் மின்னொளி கபாடி போட்டி நடந்தது.
    • 2-ம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது.

    கீழக்கரை

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத் தில் 12-ம் ஆண்டு ஃபிரண் ட்ஸ் ஸ்டார் அணியினர் நடத்திய மின்னொளியில் கபாடி போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 35 ஆயிரமும் சுழற்கோப்பையையும் எஸ்.பி. பட்டிணம் வி.ஆர். எஸ். ஒய் பிரதர்ஸ் அணி பெற்றது.

    இரண்டாம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது. மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் சுழற் கோப்பையை சோழகன் பேட்டை அணி பெற்றது.

    நான்காம் பரிசான ரூ.20 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் ஸ்பார் டன்ஸ் அணி பெற்றது.

    ஐந்தாம் பரிசு ரூ.15 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் லெஜண்ட் அணி பெற்றது.

    வெற்றி பெற்ற அணி வீரர்களை த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட துணை செயலாளர் நிஸார் அஹமது, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாக்கி, தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜ சேகர், த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ஜின்னா இளையோர் அணி புஹாரி தமிம், ம.ம.க. செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் வாழ்த்தினர்.

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
    திருமங்கலம்
     
    திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் விருமாண்டி. அரசுபோக்குவரத்துக்கழக டிரைவர். இவரது மகன் காசிநாதன் (19). உசிலம்பட்டி முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் காசிநாதன் மைக்செட் போடுவது வழக்கம்.   

    சாத்தங்குடி கிராமத்தில் புதுமனைபுகுவிழாவிற்கு மைக்செட் மற்றும் சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி காசிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    நாமக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    நாமக்கல்:

     நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 70.7 டிகிரியாக நிலவியது. 

    நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவானது. அடுத்த 3 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். 

    காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு 8 முதல் 10 கி.மீ. என்றளவில் வீசும். இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலூர்

    அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி.  வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா. 

    இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன்  அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.

     அப்போது  பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில்,  3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    ×