என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kabaddi tournament"

    • திருச்சி சமது மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
    • விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.

    திருச்சி,

    திருச்சி காஜா நகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியின் ராக்சிட்டி சகோதயா-2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.

    சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கழந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம்,

    பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டக்டர். சி.ஜெ.சாக்கோ, குட்ஷெப்பர்டு பள்ளியின் முதல்வர் டக்டர்.ஜாய் தாமஸ், பள்ளியின் துணை முதல்வர் மும்தாஜ் பேகம், மேலும் இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் அவர்கள் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தினர்.

    • மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது
    • மாணவர்களுக்கு தலைமையாசிரியை பாராட்டு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் அணிகள் கலந்துக் கொண்டு விளையாடினர். திங்கள்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

    இதன் மூலம் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் மாறன், தலைமையாசிரியை சுகந்தி, ஆசிரியர்கள் அந்தோணி தாஸ், பிரசாத், இசைவாணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • 50 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள கல்லுட்டை கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.

    இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.

    5 பிரிவுகளாக, 2 நாட்களாக நடைபெற்ற போட்டி இன்று காலை நிறைவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் விளையாட்டின் முடிவில் முதலாவது பரிசாக 9அடி கோப்பையை ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 8 அடி கோப்பை மற்றும் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.

    இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.

    2 நாட்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • மாநில கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கலெக்டரை சந்தித்து பாராட்டு பெற்றனர்

    அரியலூர்:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர். பின்னர் அந்த அணி வீராங்கனைகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 20-க்கும் மேற்பட்ட கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரில் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகம விழாவை முன்னிட்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    ஒடுகத்தூரில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. உதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.

    இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.

    இதில் 5 பிரிவுகளாகவும், 2 நாட்களாக நடைபெற்ற போட்டியானது நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இதில் சிறப்பாக விளை யாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் விளையாட்டில் முடிவில் முதலாவது பரிசாக 10 அடி கோப்பையை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 9 அடி கோப்பை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.

    இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.

    2 நாட்களாக விறுவி றுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • ஜூனியர் பெடரேசன் கோப்பை ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி நடந்தது.
    • போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை

    உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-

    6-வது ஜூனியர் பெட ரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் செல்லூர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் சிலை முன்பிருந்து வீரர் -வீராங்கனை களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    இந்த அணி வகுப்பினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து முதல் நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், கலந்து கொள்கிறார்கள்.

    2-ந்தேதி 2-ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்கள். கடைசி நாளாக 3-ந் தேதி போட்டி களை தளபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.

    மதுரையில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணி களும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேஷ், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் மோதுகின்றனர்.

    இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்ப டுகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்க தொகையாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாநிலங்களுக்கு இடையேயான யுவா கபடிப்போட்டியில் தமிழக அணியில் திருச்சி வீரர் சாதனை படைத்தார்
    • சிறந்த ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூரை அடுத் துள்ள பாளைய–நல்லூர் கிரா–மத்தைச் சேர்ந்த மருத–முத்து-கண்ணகி தம்பதி–யின–ரின் 8 குழந்தை–களில் 7-வது வாரிசு சுதாகர் (வயது 21).திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இரண்டா–மாண்டு வரலாறு படிக்கும் மாணவரான இவர் இளம் வயது முதலே கபடியில் ஆர்வம் காட்டியதால், கல்லூ–ரியில் விளையாட்டு ஒதுக்கீட்டு மாணவராக தேர்வு செய்யப்பட்டு பயின்று வருகிறார்.யுவா கபடி போட்டிகளின் முக்கிய நோக்கம் இளை–ஞர்களிடமிருந்து திறமை–களை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும். கபடியில் ஆர்வமுள்ள, அதையே தொழிலாகக் கொள்ள விரும்பும் இளை–ஞர்களுக்கு அதிகா–ரிகள் களம் அமைத்துக் கொடுப் பதே இப்போட்டி–களின் நோக்கமாகும்.ஆண்டு முழுவதும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது, ஆண்டு முழுவதும் வீரர்களின் பதிவுகளை உருவாக்குவது யுவாவின் நோக்கமாகும்.ராஜஸ்தான், உத்தரபிர–தேசம், ஹரியானா, பாண் டிச்சேரி, தமிழ்நாடு முத–லான மாநிலங்களுக்கி டை–யேயான யுவா கபடிப் போட்டி, பாண்டிச்சேரி கடற்கரை ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் சார்பாக பழனி டஸ்கர்ஸ் அணி பங்கேற்றது. சேலம் சஞ்சீவியின் தலைமையில் பங்கேற்ற அணியில் சுதாகர் பங்கேற்றார்.யுவா குளிர்காலத் தொடர் கபடிப்போட்டிகள் கடந்த நவம்பர் 27-ந்தேதி தொடங்கி 35 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஹரி–யானா மாநிலத்தைச் சேர்ந்த ஹம்பி ஹீரோஸ் அணி முதல் பரிசான ரூ.20 லட்சத்தை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை தமிழக அணி பழனி டஸ்கர்ஸ் வென்று ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசையும் பாராட்டுகளையும் பெற்றது.தினசரி தேர்ந்தெடுக்கப் படும் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசுத் தொகையை 25 முறை சுதாகர் வென்றுள்ளார். மேலும் தொடர் ஆட்டத்தின் சிறந்த ஆட்ட நாயகனாக சுதாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு லட்சம் ரொக்கப் பரி–சினை வென்றுள்ளார். 2021-ல் ஹரியானாவில் நடைபெற்ற அனைத்திந்திய கபடிப் போட்டியில் 47-வது ஜூனியர் போட்டியில் சுதாகர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.பயிற்சிகளுக்காகவும், குடும்ப சூழ்நிலை காரண–மாகவும் தொண்டு நிறுவ–னங்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் உதவி கோரியுள்ளார். வரவிருக்கும் அனைத்திந்திய கப–டிப்போட்டியில் பங்கேற்று, சிறந்த விளை–யாட்டு வீரருக் கான பரிசைப்பெற்று, தமி–ழகத்திற்கும், திருச்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே இவரது இலக்காக உள்ளது.

    • மதுரையில் ஜூனியர் பெடரேஷன் கபடி போட்டி நடந்தது.
    • அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    மதுரை

    உலககோப்பைக்கான இந்திய கபடி அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது.

    இதில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.

    லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2 நாட்களாக நடந்த லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று காலை ஆண்களுக்கான அரை இறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி ராஜஸ்தான் அணியை 40- 37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60- 42 என்ற புள்ளிகளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின.

    இறுதி போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா மாநில ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், உள்ளிட்ட பலர் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.

    ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஈரானில் நடைபெறும் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் நடந்தது
    • 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகிறது முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மூன்றாம் பரிசாக 50,000 உள்ளிட்ட பல்வேறு ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

    தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த அணிகளான ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை, திருச்சி தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், ஹைதராபாத் ஆர்டிஐ, பெங்களூர் மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்ஸ் ராணுவ அணி, ஜே கே அகாடமி கேரளா, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம், அந்தியூர் சக்தி பிரதர்ஸ், பெங்களூர் நேஷனல் ஸ்போர்ட்ஸ், சென்னை பிரண்ட்ஸ் உள்பட 25க்கும் மேற்பட்ட சிறந்த அணிகள் என மொத்தம் 750 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    • பொன்னமராவதி அருகே கபாடி போட்டி நடைபெற்றது
    • 400 வீரர்கள் கலந்து கொண்டு 5 சுற்றுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி காயம்பட்டி கிராமத்தில் ஊர்பொதுமக்கள், ஸ்டார் கபாடி குழு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 22-ம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகளில் பங்கேற்ற போட்டியில் 400 வீரர்கள் கலந்து கொண்டு 5 சுற்றுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மறறும் ரொக்க பரிசுகள் விழா கமிட்டியார்கள் வழங்கினர். சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பரிசுகள் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.


    • ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது.
    • இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜாகீர் அம்மாபாளைத்தில் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் துணை மேயரும், மெய்யனூர் பகுதி செயலாளருமான கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் தி.மு.கவினர் மற்றும் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளாப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. மகளிர் காண கபடி விளையாட்டு போட்டி காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    போட்டியை கதிர் ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    4 பிரிவுகளாக கபடி போட்டி நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8அணிகளும், கல்லூரி பிரிவு சார்பில் 5, அணிகளும் பொது பிரிவில் 2 அணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவில் 2 அணிகள் என மொத்தம் 17 அணிகள் பங்கேற்றன.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, கவுன்சிலர் விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×