என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி சமது மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டி
- திருச்சி சமது மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
- விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.
திருச்சி,
திருச்சி காஜா நகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியின் ராக்சிட்டி சகோதயா-2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.
சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கழந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம்,
பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டக்டர். சி.ஜெ.சாக்கோ, குட்ஷெப்பர்டு பள்ளியின் முதல்வர் டக்டர்.ஜாய் தாமஸ், பள்ளியின் துணை முதல்வர் மும்தாஜ் பேகம், மேலும் இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் அவர்கள் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தினர்.






