என் மலர்
உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியை கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.
முதல் - அமைச்சர் கோப்பை கபடி போட்டி
- கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. மகளிர் காண கபடி விளையாட்டு போட்டி காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.
போட்டியை கதிர் ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
4 பிரிவுகளாக கபடி போட்டி நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8அணிகளும், கல்லூரி பிரிவு சார்பில் 5, அணிகளும் பொது பிரிவில் 2 அணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவில் 2 அணிகள் என மொத்தம் 17 அணிகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, கவுன்சிலர் விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






