என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதயேந்திரம் புனித அந்தோணியார் பள்ளி சாம்பியன்
- மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது
- மாணவர்களுக்கு தலைமையாசிரியை பாராட்டு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் அணிகள் கலந்துக் கொண்டு விளையாடினர். திங்கள்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
இதன் மூலம் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் மாறன், தலைமையாசிரியை சுகந்தி, ஆசிரியர்கள் அந்தோணி தாஸ், பிரசாத், இசைவாணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
Next Story






