search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 517 மி.மீ. மழை கொட்டியது
    X

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 517 மி.மீ. மழை கொட்டியது

    • இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரித்து வந்தது.

    பகல் முழுவதும் அடிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடித்தது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. மாலையில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.

    தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.

    தஞ்சை அருகே பூதலூர் ,திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.

    இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுகோட்டை, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடைவிடாமல் மழை பெய்தது.

    ஒரே நாளில் மாவட்டத்தில் 517.40 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    பூதலூர் -102.60, திருக்காட்டுப்பள்ளி -69.20, நெய்வாசல் தென்பாதி-39.20, கும்பகோணம் -35.60, திருவிடைமருதூர் -33.60, குருங்குளம் -30.60, வல்லம் -23, தஞ்சாவூர் -19.

    Next Story
    ×