என் மலர்
நீங்கள் தேடியது "fisherman"
- வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
- தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
- இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.
அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.
- நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பார்த்திபனின் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.
- இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது40). மீனவர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு தெருவில் நிறுத்தி இருந்தார். நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். எனி னும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பா கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
- முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையத்தை அடுத்த திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்த வர் அசோக் (வயது28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அசோக் திப்புராயப் பேட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோ ருடன் அங்குள்ள கடையில் நின்று பேசிக்கொண்டி ருந்தார்.
அப்போது அங்கு வந்த முத்து திடீரென அசோக் மற்றும் அவரது நண்பர்க ளிடம் தகராறு செய்தார். பின்னர் முத்து போன் செய்து தனது கூட்டா ளிகளை அங்கு வரவழைத்தார். முத்துவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அசோக் மற்றும் அவரது நண்பர்களை கல்லால் தாக்கினர்.மேலும் அவர்களது மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்ப டுத்தினர். அதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் தலையில் வெட்டினர்.
இதனால் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் அலறல் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அசோக் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீகாந்த், விக்னேஷ் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த அசோக் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து அவரது கூட்டாளிகளானை ரஞ்சித், சற்குரு, ஹரி ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது.
- மீனவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் அஸ்வின் (வயது 32), பிரசாத் (42) ஆகிய மீனவர்கள் மாயமாகினர். இதனையடுத்து மாயமான மீனவர்களின் மனைவிக்கு அரசு வேலை தருவதாக மாவட்ட கலெக்டர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீனவர்கள் மாயமாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் வாழ்வாதமின்றி தவித்து வருவ தாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க கோரியும், அமலிநகரில் மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
- தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.
இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- மைக்கேல்ராஜா நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 மீனவர்களுடன் கடலில் சங்கு குளிப்பதற்காக படகில் சென்றார்.
- திருச்செந்தூர்- காயல்பட்டினம் கடல் பகுதியில் செல்லும் போது படகில் இருந்து மைக்கேல்ராஜா திடீரென கடலில் தவறி விழுந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜா (வயது 26) மீனவர். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 மீனவர்களுடன் கடலில் சங்கு குளிப்பதற்காக படகில் சென்றார்.
திருச்செந்தூர்- காயல்பட்டினம் கடல் பகுதியில் செல்லும் போது படகில் இருந்து மைக்கேல்ராஜா திடீரென கடலில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட சக மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு படகில் ஏற்றி தூத்துக்குடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மைக்கேல்ராஜா நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்,
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழுமம் தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
- திடீரென மயங்கி நிலையில் கடலில் மூழ்கி கிடந்துள்ளார் கரைக்கு சென்ற போது இறந்து விட்டது தெரியவந்தது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54).
இவர் நேற்று (புதன்கிழமை) காலை பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கடலில் இறங்கி சம்பா நண்டு பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த மீனவர்கள் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலையை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கி நிலையில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சேகர் உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று அதிகாலை 4 மணிக்கு செல்வமணி கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
- அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56).
இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
துறைமுகத்தில் 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார்.
இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும் வழியில் படகு மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அருகில் தேடி உள்ளனர்.
அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளது தெரிய வந்தது.
இதனை எடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக செல்வமணி உடல் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- மனுக்களை வழங்கி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தத