search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    X

    நெல்லை, தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    • காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    Next Story
    ×