search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசினார்.

    மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • மனுக்களை வழங்கி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் மீனவர்களின் குறைகள் மற்றும் குறைகளை கேட்ட றிந்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். மீனவர்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கை களை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்க ளாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க கோருதல், மீனவர்கள் கடலில் இறந்ததற்கான இறப்பு நிவாரண தொகை பெற கோருதல், மீன்பிடித்தடை காலத்திற்கான உதவித்தொகை பெறுதல், பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ய கோருதல், மீனவர்களுக்கான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண உத்தரவி டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக மாற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

    பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவிகள் என தொடங்கி அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக உருவாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றனர். இதில் மீனவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மீனவர்கள் ஒவ்வொருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக உருவாக்குவதற்கு ஏதுவாக தனித்தனியாகவும், மீனவ சங்கம் சார்பிலும் மரக்கன்றுகளை கடலோர பகுதிகளில் நடுவதன் மூலம் மண் அரிப்பில் இருந்து காத்திடவும், சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார் சிவக்குமார், கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×