மாமல்லபுரத்தில் சாரல்மழை: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மழையால் சிரமப்பட்டனர்.
மாமல்லபுரத்தில் சாரல்மழை: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அப்பகுதி சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.

மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோயிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com