search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னல் தாக்கி சேதமடைந்த விவசாயி வீட்டை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்:   அரசு சார்பில் வீடு கட்டி தருவதாக உறுதி
    X

    சேதமடைந்த வீட்டை உதயசூரியன் எம்.எல்.ஏ பார்வையிட்ட காட்சி.

    மின்னல் தாக்கி சேதமடைந்த விவசாயி வீட்டை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்: அரசு சார்பில் வீடு கட்டி தருவதாக உறுதி

    • மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது.
    • வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது . வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம் 4 பவுன் நகை ,நிலத்தின் பத்திரம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இன்று காலை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதய சூரியன் எரிந்து போன வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் ,தாசில்தார் இந்திரா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன் ,துணைத் தலைவர் தன பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×