கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலை செய்துகொண்ட ராஜேஷ்.
தற்கொலை செய்துகொண்ட ராஜேஷ்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது 32) சமையல் கூலி தொழிலாளி.

இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அதனை கண்ட ராஜேஷ் மகன் ருத்ரன் தனது தாத்தா சேகர் இடம் கூறியுள்ளான்.

உடன் சேகர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த ராஜேஷை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் ராஜேஷ்ன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com