search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive Care Unit"

    • கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விக்கிரவாண்டி:

    கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×