என் மலர்
நீங்கள் தேடியது "Highway"
- 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
- சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும்.
பல்லடம் :
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற சுபநாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.
- இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.
இந்த நெடுஞ்சாலையில் நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகிறது.
மண் குவியல்
இந்த நெடுஞ்சாலையில் உள்ள சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும், இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.
தற்போது இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மண் குவியல்கள் சாலையை ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் அவ்வப்போது மண் குவியல் மீது மோதி சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
- இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு குலவணிகர்புரம் ெரயில்வே கேட் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தினமும் ரெயில்கள் செல்லும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து நான்கு வழி சாலை வரையிலும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
எனினும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலைகளில் ஒன்றான எஸ்.என். ஹைரோடு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மழை பெய்தால் வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழும் நிலையும், வெயில் அடித்தால் புழுதி பறப்பதுமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு வந்தது.
இதன் பயனாக நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் டவுன் ஆர்ச் வரையிலும் இந்த சாலையானது 12 மீட்டர் அகலத்தில் இருந்து 16 மீட்டர் அகலம் கொண்டதாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியது.
மேலும் சாலையின் நடுவில் தடுப்பு கட்டப்பட்டு அதில் செடிகள் வைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 2 ஆண்டுகளாக வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது சாலை சீரமைப்பு பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் ஈரோட்டில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
வணிகர்கள் மிகுந்த வலிமையோடு செயல்பட வேண்டிய காலம் இது அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் போன்றவை சில்லரை வணிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது சில்லறை வணிகர்கள் கடைப் பிடிக்க முடியாத பல்வேறு சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது சில்லறை வணிகர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் போட்டி போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பு ஆங்கிலேயர்கள் எவ்வாறு நமது நாட்டிற்குள் நுழைந்தார்களோ அதேபோன்று அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் வந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது இதை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இப்போதாவது பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்.
நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கொடுமையானது இது புதிய முறை கொள்ளை ஆகும் எனவே மத்திய அரசு இதை கைவிட வேண்டும் லாரி உரிமையாளர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு வெள்ளையன் கூறினார். #vellaiyan