என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaurav Gogoi"

    • மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
    • அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை

    டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.

    அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.

    இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • தேர்தல் வரவிருக்கின்றன. அவர்கள் தோல்வியை மறைக்க வேண்டும். இது அவர்களுடைய தந்திரம்.
    • வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க யாரையும் அனுமதிக்க விடமாட்டோம்.

    பாஜக, ஆர்எஸ்எஸ், வி.ஹெச்.பி., பஜ்ரங் தளத்தில் உள்ள குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் அசாமில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார்.

    மாட்டிறைச்சி, மற்றும் பசுக்களின் பாகங்களை பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு முன்னதாக வைப்பவர்களின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிந்து கொள்ள விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடையவர்களை கைது செய்ய வேணடும். முதன்முதலாக இந்த எண்ணம் தோன்றியவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோகாய் தெரிவித்துள்ளார்.

    மேலும் கவுரவ் கோகாய் இது தொடர்பாக கூறியதாவது:-

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் வரவிருக்கின்றன. அவர்கள் தோல்வியை மறைக்க வேண்டும். இது அவர்களுடைய தந்திரம். தேர்தலுக்கு முன்னதாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் வி.ஹெச்.பி. உள்ள சில குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற செயல்களை செய்ய முயற்சிப்பார்கள்.

    இங்கு வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க யாரையும் அனுமதிக்க விடமாட்டோம் என்பதுதான் எங்களுடைய முக்கிய எண்ணம். பாஜக-வால், மணிப்பூர் மக்களின் நிலையை நாம் பார்க்கிறோம். அதை அசாமில் அனுமதிக்க விடமாட்டோம்.

    அசாம் மாநில முதல்வர் அசோமியா ஜின்னா (Asomiya Jinnah) போல் செயல்படுகிறார். நாங்கள் ஜின்னா மாதிரியான அரசியலை அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
    • உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது.

    மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரும், எம்.பியுமான கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மாநிலத்தின் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

    எனவே, இரு சமூகத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசாதபோது எப்படி அமைதி மற்றும் சகஜநிலை ஏற்படும்.

    மாநில முதல்வர் பிரேன் சிங்கின் செயல்பாட்டால் மெய்டீஸ் மற்றும் குகிஸ் ஆகிய இரு சமூகமும் மகிழ்ச்சியடையவில்லை.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது. அமைதிக் குழுக்களில் முதல்வர் இருப்பதுதான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது.

    பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இதனால், நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் 60,000 பேரின் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு இல்லாமலும், 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரையிலும் அமைதி திரும்பாது" என்றார்.

    • மோடி பிரதமராக இருக்கும்வரை பா.ஜ.க.வின் பாராளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்றார்.
    • இம்முறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 230 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வார்களா என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. 230-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. பிரதமருடன் சேர்த்து மொத்தம் 72 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கவுரவ் கோகாய் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு காலத்துக்கும் நீடிக்காது.

    மோடியின் தலைமை பாணி அவர் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக முடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

    இலாகா ஒதுக்கீட்டில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பேரம் பேசவில்லை என நான் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் சாதுர்யமிக்க அரசியல் தலைவர்கள். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை காலம்தான் சொல்லும்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது, தகுதிநீக்கம் செய்வது, அவர்களை வேட்டையாடுவது என தொடர்ந்து ஆளும் தரப்பு முயலும்.

    இப்போது 230-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்தரப்பில் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் 230 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வார்களா? அவர்களின் அணுகுமுறை மாறாது.

    ஆளும் கட்சி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் நாங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். இதைத்தான் பொதுமக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் பொதுமக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஜனாதிபதி பதவி என்பது அனைத்து பிரிவினரின் உணர்வுகளையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கக்கூடியது.
    • ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் கோகாய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் திரவுபதி முர்முவின் பழங்குடியின பின்னணியை முன்னிலைப்படுத்துகிறது. ஜனாதிபதி பதவி என்பது அனைத்து பிரிவினரின் உணர்வுகளையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கக்கூடியது.

    ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தை விட பழங்குடியின பின்னணியை மட்டும் முன்னிலைப்படுத்துவதுதான் பா.ஜனதாவின் அரசியல் நோக்கம் என்றால், அவர்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல், 2 நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி"

    இவ்வாறு அவர் கூறினார்

    ராகுல் காந்தி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதை மம்தா பானர்ஜி விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் கூறியுள்ளார். #Congress #MamataBanerjee #GauravGogoi
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலம் ராம்பூர் ஹட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் பேசியதாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாட்டில் கொல்கத்தாவில் சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடந்தது. ஆனால் அக்கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஏதோ பிரச்சினை உள்ளது.

    ராகுல் காந்தி நாட்டின் அடுத்த பிரதமராக வருவதை அக்கட்சியும், மம்தாபானர்ஜியும் விரும்பவில்லை. அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் பதவியேற்பார். அவரது தலைமையில்தான் புதிய அரசு பதவியேற்கும் என்பதை திரிணாமுல் காங்கிரசுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    மம்தா பானர்ஜி பிரதமராக பதவியேற்க முடியாது என்பதை தெரிந்துகொண்டதால் திரிணாமுல் காங்கிரசார் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள்



    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது,

    ‘‘எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர். இதை மறந்துவிட்டு கவுரவ் கோகாய் பேசுகிறார்’’ என்றார்.

    கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகள் பேரணியில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் சிங்வி கலந்துகொண்டனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்காமல் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தனர். #Congress #MamataBanerjee #GauravGogoi
    ×