என் மலர்
நீங்கள் தேடியது "Medical College"
- திருமங்கலம் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் கண்மாய் நீர் சூழ்ந்தது.
- இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலை செல்கிறது.
திருமங்கலம்
திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி- மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் நான்கு வழிச்சாலை செல்கிறது. சாலை உயரம் அடைந்தததால் கல்லூரி வளாகம் தாழ்வானது. மழைக்காலத்தில் அருகே உள்ள மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டி நாயக்கனூர் கண்மாய்க்கு வரும்போது ஓமியோபதி கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன. இந்த ஆண்டும் உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் செல்ல தொடங்கியது.
இதனால் அரசு ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் கண்மாய் நீர் சூழ்ந்தது. கண்மாய் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் கடந்தாண்டு போல் கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இது ஓமியோபதி மருத்துவ மாணவ- மாணவிக ளிடையேய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில்,2 தினங்களாக கண்மாய்க்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- 2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 214 மதிப்பெண் பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மதுரை தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
- எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறேன். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்கள் மகள் யோகிதா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 600-க்கு 531 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
ஆசைத்தம்பிக்கு உடல்நக்குறைவு ஏற்பட்டதால் முத்துச்செல்வி கூலி வேலைக்கு சென்று மகளை படிக்க வைத்து வருகிறார். 2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 214 மதிப்பெண் பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மதுரை தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு படித்து க்கொண்டே நீட் தேர்வுக்கும் தயாராகினார். இந்த ஆண்டு 270 மதிப்பெண் பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்டார். இதில் மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது. வருகிற 29-ந் தேதிக்குள் சேர வேண்டும். தற்போது படிக்கும் கல்லூரியில் சான்றிதழ்களை கேட்டபோது தேர்வு கமிட்டியிடம் தடையில்லா சான்று பெற்று வர கூறினர்.
இதனால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தவித்து வருகிறார். இது குறித்து மாணவி யோகிதா கூறியதாவது:-
கலந்தாய்வின்போது கல்லூரியில் இருந்து விலகினால் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்க இயலும் என்றனர். இது முன்பே தெரிந்திருந்தால் பல் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்காமல் இருந்திருப்பேன். தற்போது நான் ஆசைப்பட்ட எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறேன். எனவே குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.
- கீழப்பாவூரை சேர்ந்த ராமலட்சுமி விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மைதானம் அருகே வசித்து வருபவர் ராமச்சந்திரன் விவசாயி.
இவரது மனைவி ராம லட்சுமி (வயது 66) இவர் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். ராமலட்சுமி மற்றும் ராமச்சந்திரன் இருவரும் மகன் சுடலை ஈசன் என்ற அருண் வீட்டில் வசித்து வந்தனர். சுடலை ஈசன் கீழப்பாவூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். ராமலட்சுமிக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்யப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அவரை பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் வீட்டிற்கு திருப்பி கொண்டு வரப்பட்டது.
பின்னர் பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ ஏற்பாட்டில் ராமலட்சுமியின் கண்கள் தானம் செய்யப்பட்டது. அத்துடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தினர் ஏற்பாட்டில் உறவினர்கள் அனைவரது சம்மதத்துடன் ராமலட்சுமி உடல் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு இவரது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று உடல் தானம் செய்யப்பட்டது.
கீழப்பாவூர் பகுதியில் பெண் உடல் தானம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- நிதேஸ் சந்துரு என்ற மாணவன் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தான்
- தற்பொழுது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது
நெல்லை:
நெல்லை டவுண் லிட்டில் பிளவர் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2022-21 -ம் கல்வியாண்டில் பயின்ற நிதேஸ் சந்துரு என்ற மாணவன் பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தான். அந்த மாணவனுக்கு தற்பொழுது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மாணவனை பள்ளி தாளாளர் மரிய சூசை பாராட்டினார்.
- இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.
- மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
லயன்ஸ் இயக்கத்திற்கு என்று வாழ்ந்து தான் இறந்தும் பிறர் வாழ கண்களை மட்டுமல்ல, மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக தனது உடலையும் தானமாக கொடுத்த நல்லாசிரியர் லயன் துரைராசன் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.
இத்தனை கடினமான துயர நேரத்திலும், அவரின் மனைவியும், பிள்ளைகளும் துரைராசனின் கடைசி ஆசைகளை" (கண் தானம், உடல் தானம்) முழுவதும் நிறைவேற்றிட உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- 1972-ம் ஆண்டு படித்த மாணவர்கள் இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.
- சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நெல்லை:
நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.
கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், பேராசிரியை ஜெயந்தி, சுஜாதா ஆண்ட்ரூ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், டாக்டர் மோகன் ஆறுமுகப்பாண்டியன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 72-ம் ஆண்டில் இணைந்து தற்போது நெல்லை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் பொறுப்பு முதல்வர் டாக்டர் ராமகுரு, டாக்டர்கள் துரையப்பா, முன்னாள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருண்மொழி, ராமசாமி, சீனிவாசன், டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜிம்லா மற்றும் மருத்துவர்கள் சுந்தர்ராஜன் பரமசிவன், ராஜன் ஜெயகுமார், ஹம்லவர்தினி செல்வராஜ், மோகன் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் மாவட்ட தமிழக ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அதன் மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், பிரபாகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ரெங்கசாமி, மாரிமுத்து, கதிர்வேல், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொறுப்பாளர்கள் முத்து, அருள், சக்திவேல், பாரதி, அகிலா, சதீஸ்குமார் உட்பட பலர் பேசினர். நிறுவன தலைவர் சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் காஷ்மீரில் பயங்காரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,
சேலத்திலிருந்து நாமக்கல், துறையூர், பெரம்பலூர் வழியாக அரியலூர் ரெயில் பாதையை இணைக்கும் வகையில் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும், காவேரி ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு நீர்பாசன வசதி ஏற்படுத்தவேண்டும், பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பிரபு, சிலம்பரசன், பேரூராட்சி செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பேசினர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். #tamilnews

கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.
இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
அயோத்திக்கு யாராலும் அநீதி இழைக்க முடியாது. நமது பெருமை, கவுரவம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். #Ayodhyamedicalcollege #KingDasharatha #KingDasharathamedicalcollege #YogiAdityanath
வேலூர்:
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது22). திருநங்கையான இவர். பிளஸ்-2 தேர்வில் 757 மதிப்பெண் பெற்றார்.
இவருக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை அளிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான புகார் மீது மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில் ஆகியவையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டிலும் மாநில மனித உரிமை ஆணையத்திலும் தமிழ்ச்செல்வி மனுதாக்கல் செய்தார்.
இதன்மீது விசாரணை நடத்திய நீதிபடி ஜெயச்சந்திரன், நடப்பு கல்வியாண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச் செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை அளிக்கப்பட்டது. அதற்கான சேர்க்கை கடிதத்தை தமிழ்ச்செல்வியிடம் கல்லூரி டீன் சாந்திமலர் வழங்கினார்.
மிகுந்த சட்டப் போராட்டத்துக்கு பிறகு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை கிடைத்திருப்பது குறித்து திருநங்கை தமிழ்ச்செல்வி கூறியதாவது:-
பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகே திருநங்கையான எனக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், திருநங்கை சமூக முன்னேற்றத்துக்கும் உரிய பங்களிப்பை செய்வேன்.
திருநங்கைகள் தடையின்றி படிக்கவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும் மத்திய, மாநில அரசு இதுவரை சட்டம் வகுக்கவில்லை. அதற்கான சட்ட அனுமதி அளிக்கும்பட்சத்தில் திருநங்கைகள் சமூகமும் எல்லா துறைகளிலும் நல்ல நிலைக்கு உயர முடியும், என்றார் அவர்.
அவரது தாயார் அமுதா கூறுகையில், ‘எனது கணவர் சீனிவாசன் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன்பிறகு கூலி வேலை செய்தே குடும்பம் நடத்தி வந்தேன். தமிழ்ச்செல்வி திருநங்கையாக மாறியது குறித்து ஊரார் பலரும் கேலி செய்தனர்.
எனினும், எனது குழந்தை என்பதைவிட இந்த மண்ணில் பிறந்த ஒரு ஜீவன், அதைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்ச்செல்வியை நல்லமுறையில் வளர்த்து அவர் விரும்பியதைப் படிக்க வைத்தேன்.
சமூகத்தில் திருநங்கைகள் குறித்து மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது. அவ்வாறு இல்லாமல் அவர்களும் சக மனிதர்களே என்ற கண்ணோட்டம் ஏற்பட்டால் திருநங்கைகள் சமூகம் மேம்பட வழிவகை ஏற்படும்’ என்றார்.
கல்லூரி டீன் சாந்தி மலர் கூறும்போது, ‘ஒரு காலத்தில் பெற்றோர்களே திருநங்கைகளை வெறுத்து ஒதுக்கினர். இதனால், பொதுமக்களும் அவர்களை வேண்டா வெறுப்பாக நடத்தும் நிலை இருந்தது. இப்போது, திருநங்கைகளை அனைவரும் ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருநங்கைகள் சிறப்பாக படித்து சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்.
இக்கல்லூரியில் தமிழ்ச்செல்வி எந்தவித பாகுபாடின்றி மற்ற மாணவிகளை போல் சமமாக நடத்தப்படுவார். இவருக்கு விடுதியில் இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதியில் கிடைக்காத பட்சத்தில் காலியாக உள்ள டாக்டர்கள் தங்கும் அறையை இவருக்கு ஒதுக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்றார். #Transgender #VelloreMedicalCollege
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கிங் கொடுமை தாங்காமல் சில மாணவர்கள் விபரீத முடிவு எடுத்தனர். எனவே ராக்கிங் கொடுமையை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம் ராக்கிங் செய்வது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த 2-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல கோவை அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும் ராக்கிங் கொடுமை அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி இருந்து மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை, விடுதியில் தங்கியிருக்கும் சீனியர் மாணவர்கள் 4 பேர் ராக்கிங் செய்து உள்ளனர்.
இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். உடனே அவர்கள், டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ராக்கிங்கில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகனுக்கு ராக்கிங் கமிட்டி அறிவுறுத்தியது.
இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் வகையில் கல்லூரி துணை முதல்வர், ஆர்.டி.ஓ., மனநல மருத்துவர், விடுதி காப்பாளர் உள்பட 10 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி, தர்மபுரி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 4 பேர் தான் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவரை ராக்கிங் செய்தது தெரியவந்தது.
இதையடுத்த அந்த மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது குறித்து மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 750 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவ-மாணவி களின் வசதிக்காக கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி உள்ளது.
இங்கு சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் 10 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ராக்கிங் செய்வது சட்டப்படி குற்றம். அதையும் மீறி ராக்கிங் செய்தால் சம்பந்தப்பட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர கல்லூரி மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு ராக்கிங் தடுப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் மீறி மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் நடந்து உள்ளது. இதில் 4 மாணவர்கள் ராக்கிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே ராக்கிங் செய்த மாணவர்கள் 4 பேரும் ஒரு ஆண்டுக்கு விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மாணவர் மட்டும் ஒரு மாதத்துக்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இங்குள்ள விடுதியில் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வார்கள் என்பதற்காக பிற மாணவர்கள் செல்ல முடியாத வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் 3-ம் ஆண்டு மாணவர்கள் 2-ம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து உள்ளனர்.
இது குறித்த அறிக்கை டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராக்கிங் நடக்காத வகையில் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews