ஆபத்தான நிலையில் ரத்தன் டாடா- மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை?

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதி.ரத்தன் டாடா அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் அறிவிப்பு ஒன்று பகிர்ந்தார்.
ஆபத்தான நிலையில் ரத்தன் டாடா- மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை?
Published on

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

86 வயதான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டாடா, " வதந்திகளை பரப்ப வேண்டாம்" என கூறியிருந்தார்.

இது தொடர்பாக, ரத்தன் டாடா அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் அறிவிப்பு ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில், "எனது உடல்நிலை குறித்து தற்போது பரவி வரும் வதந்திகள் எனது கவனத்திற்கு வந்தன. மேலும் இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். கடந்த திங்கள் அன்று தனது வயது மற்றும் அது தொடர்பான மருத்துவ காரணங்களுக்காக வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன்" என்றார்.

டாடாவின் உடல்நலம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து டாடாவின் பிரதிநிதிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com