search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai hospital"

    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.
    • விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    டேராடூன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கினார்.

    உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து காரில் சென்றார். மங்லெளர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான கார் முழுமையாக தீப்பிடித்து உருக்குலைந்தது.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

    மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், சிகிச்சை முடிந்து இன்று பாட்னா திரும்பினார். #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மகனது திருமணம் முடிந்ததும் கடந்த திங்கட்கிழமை அவர் மும்பை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்ததுடன், வரும் 30-ம் தேதி அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், மும்பை ஏசியன் ஹார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், இன்று சிகிச்சை முடிந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் இன்று மீண்டும் மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #LaluarrivesMumbai #LaluatAsianHeartInstitute
    மும்பை:

    கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். 

    மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த  8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

    இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் இன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். #LaluarrivesMumbai  #LaluatAsianHeartInstitute 
    பாட்னாவில் இருந்து சிகிச்சைக்காக இன்று மும்பை வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் திடீர் நெஞ்சு வலியால் ஆசியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பாட்னா:

    கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக இன்று பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.

    மகள் மிசா பாரதி மற்றும் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் அவருடன் சென்றனர். மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் இன்று மாலை லாலு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. #Lalu #Laluadmit #MumbaiHospital #AsianHeartInstitute 
    பீகார் முன்னாள் முதல் மந்திரியான லாலு பிரசாத் யாதவ் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டார். #LaluPrasadYadav

    மும்பை:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல் மந்திரியாக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    உடல் நிலை மோசமடைந்ததால் பாட்னா இந்திராகாந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அங்கு ஒவ்வாமை, மயக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிரமப்படும் லாலு அடுத்தகட்ட சிகிச்சைக்காக நேற்று நள்ளிரவு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பார்தி ஆகியோரும் வந்துள்ளனர்.

    ஏற்கனவே, லாலுவுக்கு கடந்த 2014-ம் ஆண்டில் மும்பை புறநகர் பகுதியான பந்த்ரா குர்லா எனும் இடத்தில் அமைந்துள்ள பிரபல இதயவியல் மருத்துவமனையில் இரு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 

    அதே மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அறுவை சிகிச்சை நிபுணர், முட நீக்கியல் துறை நிபுணர், நீரிழிவு நோய் துறை நிபுணர் மற்றும் இதயவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. #LaluPrasadYadav
    ×