search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "school girl"

  • ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவி லான ஓவியப்போட்டி நடந்தது.
  • பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

  புதுச்சேரி:

  இந்திய அரசு எரிசக்தி நுகர்வுத் துறை சார்பில், கடந்த 18-ந்தேதி புதுச்சேரி அன்னை தெரேசா முதுநிலை நல அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவி லான ஓவியப்போட்டி நடந்தது.

  இதில் திருக்கனூர் பிரைனி ப்ளூம்ஸ் இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவி பிரிதிஷா முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். பரிசுகள் வென்ற மாணவிக்கு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை முதன்மை இயக்குனர் பிரியதர்ஷினி, சென்னை ஆர்.இ.சி முதன்மை திட்ட மேலாளர் தாரா ரமேஷ் ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி மாண வியை வாழ்த்தி பேசினர்.

  அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையாக, தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கு செல்லும் மாணவி பிரதிஷாவிற்கு பயிற்சி அளித்த ஓவிய ஆசி ரியர் குமரவேல் ஆகியோரை பள்ளியின் தாளாளர் அருண்குமார், துணை தாளாளர் திவ்யா ஆகியோர் பாராட்டினர்.

  • வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார்.
  • போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

  சேலம்:

  சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார். அப்போது அவருடைய தாய் வெளியே சென்ற சிறிது நேரத்தில் பின்னர் வீடு திரும்பியபோது பையை வீட்டில் வைத்துவிட்டு மாணவி மாயமானது தெரியவந்தது.

  இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

  சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக வீட்டில் மாணவி கூறியுள்ளார். ஆனால் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இன்று பள்ளியில் ரேங்க் கார்டு வழங்க உள்ளதால் எங்கே தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே தாடிக்சேரியை சேர்ந்த ரவிக்குமார் மகள் மோகனஸ்ரீ (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வரு கின்றனர்.

  • தேர்வு எழுத சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  பெரியகுளம் :

  பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகள் ஹரினி (வயது 17). இவர் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலாண்டுத்தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார்.

  ஆனால் அவர் அங்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதிர்ச்சியடைந்த பரமசிவம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • விழுப்புரம் அருகே பள்ளி மாணவி மாயமானார்.
  • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

  விழுப்புரம்:

  விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர், மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
  • கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கன்னியாபுரத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் குட்டி நாயர் (வயது 72). இவர் கீழவூர் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பொருட்கள் வாங்கு வதற்கு வந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை அந்த சிறுமி தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.

  • கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் இன்று சாலை மறியல்
  • அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

  விழுப்புரம்:

  செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (வயது 16). ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

  இந்நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ேடார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து அவர்கள் கூறியதாவது:- பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை ேபாலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்த சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

  • மானாமதுரை பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
  • பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் பள்ளியில் படித்து வரும் மாணவி லலிணா சென்னை ஆலந்துார் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் போட்டி நடைபெற்றது.

  தமிழ்நாடு கராத்தே சாம்பியன் 2023-க்கான இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். 

  இவரை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியை பேப்லிட் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜு, பூபாலன், கலைச்செல்வி கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் மற்றும் பெற்றோர் ரவீந்திரன் பாலபிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

  பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

  • ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
  • பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது,

  வெள்ளகோவில்:

  வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவகுமார் . இவரது மகள் சத்யா(வயது 17). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், சத்யா தனியார் பள்ளியில் படிக்க விரும்பாமல் தோழிகளுடன் சேர்ந்து அரசு பள்ளியில் படிக்க விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சத்யா பள்ளிக்குச் செல்லவில்லை.

  இதனால் பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சத்யா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
  • மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடுமலை :

  உடுமலையை அடுத்த சின்னவாளவாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 53). தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அருகில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர் மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அதைத்தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அதில் மாரிமுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறி கதறி அழுது உள்ளார். இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.மேலும் இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.