என் மலர்
நீங்கள் தேடியது "tragedy"
- சிவராஜ் (வயது 25). தனது தந்தைக்கு உதவியாக கல் உடைக்கும் வேலை செய்துவந்தார்.
- இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த மினி லாரி மோதியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகண்டை கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிவராஜ் (வயது 25). இவர் தனது தந்தைக்கு உதவியாக கல் உடைக்கும் வேலை செய்துவந்தார். சிவராஜூக்கு பெண் பார்ப்பதற்காக சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு தன் தாய் லட்சுமியுடன்தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பெண்னை பார்த்துவிட்டு பகண்டை கூட்ரோடுக்கு வந்து தனது தாயை பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சிவராஜ் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிக்கும் உறவினரை பார்த்து விட்டு மீண்டும் பகண்டை கூட்டு ரோடு செல்வதற்கு தோட்டப்பாடி மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவராஜை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தடாக்டர், சிவராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் ய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவராஜ் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மணிகண்டன் குடிேபாதையில் காவியாஞ்சலி வயிற்றில் மிதித்தார்.
- போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காவியாஞ்சலி (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஸ்வந் (3) என்ற மகன் உள்ளார்.
இந்தநிலையில் காவியாஞ்சலி 3 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவி கர்ப்பிணி என்று கூட பாராமல் அவரது வயிற்றில் மிதித்தார். இதில் வலி தாங்க முடியாமல் காவியாஞ்சலி சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டு செட்டிப்பாளையம் அவ்வை நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்த காவியாஞ்சலிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது காவியாஞ்சலிக்கு கரு கலைந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தனது கரு கலைந்ததற்கு காரணமான தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து கொண்டு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
- சென்னை மார்க்கமாக வேகமாக வந்த கார் விவசாயி அய்யனார் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. இவரது மகளுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.குழந்தையை பார்த்துவிட்டு அங்கிருந்த தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து கொண்டு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது தனது சொந்த ஊரில் பஸ்சில் இருந்து இறங்கி, வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது சென்னை மார்க்கமாக வேகமாக வந்த கார் விவசாயி அய்யனார் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். அவரது மனைவியின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார்.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.
அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அந்தியூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் மனவேதனையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இந்நிலையில் மணிகண்டன், திவ்யதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திவ்யதர்ஷினி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தாய் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் உள்ள அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று 193-வது விதியின் கீழ், ரபேல் விமான ஒப்பந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, அரங்கேற்றப்பட்ட பேட்டியில் 90 நிமிடங்கள் பேசியுள்ளார். அதிலும் ரபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ரபேல் பிரச்சினையில், தன் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு கிடையாது என்று அவர் கூறியது உண்மை அல்ல.
ஒட்டு மொத்த நாடும் இந்த ஒப்பந்தம் குறித்து அவரிடம் நேரடியாக கேள்வி கேட்கிறது.
பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்லிடம் இருந்து இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது. ‘இரண்டு ஏ’ பெயர் கொண்டவரது பையில் ரூ.30 ஆயிரம் கோடியை மோடி போட்டார். அந்த நபர், மோடியின் அன்பு நண்பர்.
காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம். அதற்கு பா.ஜனதா பயப்பட தேவையில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அதனால், அ.தி.மு.க. எம்.பி.க்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாவது:-
பிரதமர் மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கிறார்கள். இங்கே அமர்ந்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. உறுப்பினர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். பிரதமர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து கேள்விகளை சந்திக்கும் துணிச்சல் இல்லை.
இப்போது என்னிடம் ஒரு ஆடியோ டேப் இருக்கிறது. கோவா மாநில மந்திரி விஷ்வஜித் ரானே, ரபேல் விவகாரம் தொடர்பான ஒரு கோப்பை முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆடியோ டேப்பை போட்டுக்காட்ட சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
அப்போது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு, “அந்த டேப் போலியானது, தில்லுமுல்லு செய்து உருவாக்கப்பட்டது. அது உண்மை என்று ராகுல் காந்தியால் அங்கீகரிக்க முடியுமா? அது பொய் என்று நிரூபணமானால், அவர் உரிமை பிரச்சினையை சந்தித்து, வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.
அதற்கு ராகுல் காந்தி, தன்னால் அதை அங்கீகரிக்க முடியாது, சபாநாயகர் அனுமதி இல்லாமல் போட்டுக்காட்ட மாட்டேன் என்று கூறினார்.
இதனால் ஆவேசம் அடைந்த அருண் ஜெட்லி, “அது போலி என்று விஷ்வஜித் ரானே மறுத்துள்ளார். அது ராகுல் காந்திக்கே தெரியும். அதனால் பயப்படுகிறார். இந்த மனிதர் திரும்பத்திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவரது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது“ என்று கூறினார்.
அப்போது ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டது. #RahulGandhi #AIADMK #Modi