என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை
- அந்தியூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் மனவேதனையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
- இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இந்நிலையில் மணிகண்டன், திவ்யதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திவ்யதர்ஷினி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தாய் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் உள்ள அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






