search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "A teenager"

  • சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
  • போலீசார் முத்தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

  பொள்ளாச்சி,

  பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. மாணவி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் மாமா வீடு நெகமம் அருகே உள்ள ஒருகிராமத்தில் உள்ளது.

  இங்கு சிறுமி தனது தாயுடன், மாதத்தில் ஒருமுறை சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கம் போல சிறுமி தனது தாயுடன், தனது மாமா வீட்டிற்கு சென்றார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்தமிழரசன் (வயது21) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

  அடிக்கடி 2 பேரும் சந்தித்து கொண்டதால் பழக்கம் நட்பாக மாறியது. ஒருநாள் முத்தமிழரசன் சிறுமியை காதலிப்பதாக கூறினார். மாணவியும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

  இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்தமிழரசன் மாண வியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதே போன்று தொடர்ந்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

  இந்த நிலையில் சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாய் அவரை அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

  அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியானார். தொடர்ந்து தனது மகளிடம் விசாரித்தார்.

  அப்போது மாணவி, தனக்கு நடந்தவற்றை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியிடம் நேரில் சென்று விசாரித்தனர். விசாரணையில் முத்தமிழரசன், மாணவியை பலாத்காரம் செய்தது உறுதியானது.

  இதையடுத்து போலீசார் முத்தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

  • வீட்டில் ரத்தீஷ் எழுதிய கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
  • தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கவுண்டம்பாளையம்,

  கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை கணேஷ் நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் ரத்தீஷ் (வயது 22). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் ரத்தீசுக்கு சேலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. எனவே அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.

  இந்தநிலையில் ரத்தீசுடன் காதல் விவகாரம் இளம்பெண் வீட்டுக்கு தெரிய வந்தது. எனவே அவர்கள் உறவுக்கார பையனுக்கு பேசி முடித்து மகளை திருமணம் செய்து வைத்து உள்ளனர். அந்த பெண்ணின் திருமணத்துக்கு ரத்தீசும் சென்று அட்சதை தூவி வாழ்த்திவிட்டு ஊர் திரும்பினார்.

  இந்த நிலையில் சேலம் பெண் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரத்தீசை தொடர்புகொண்டார். அப்போது அவர் என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்று கூறி கதறி அழுது உள்ளார்.

  இருந்தபோதிலும் ரத்தீஷ், உனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனவே நீ உன் கணவருடன் சேர்ந்து வாழவதுதான் முறை என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பெண், ரத்தீஷ் உடன் பேசவில்லை. இன்ஸ்டாகிராமிலும் தொடர்பு கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் சேலம் பெண் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவரம் ரத்தீசுக்கு 2 நாட்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. எனவே அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

  அப்போது வீட்டுக்குள் ரத்தீஷ் எழுதி கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் நான் மிகவும் விரும்பிய பெண் சேலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து விட்டாள். இது என்னை உடல், மனதளவில் பாதித்து உள்ளது. எனவே நான் தூக்கு போட்டு தற்கொலை செய்கிறேன். என்னை மன்னியுங்கள் அம்மா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சந்திரசேகரன் வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
  • போலீசார் நடத்திய விசாரணையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரியூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

  இந்த நிலையில் சந்திர சேகரன் தங்கி இருந்த வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

  இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரசேகரன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

  • சந்தோஷ் 15 வயது சிறுமியை, தவறான நோக்கில் கட்டி பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
  • சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர்.

  புதுச்சேரி:

  காரைக்கால் கோட்டுச் சேரியை அடுத்த ராயன் பாளையத்தில் உள்ள பாட்கோ காலனியில் வசிப்பவர் சந்தோஷ். (வயது 20) இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, தவறான நோக்கில் கட்டி பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.

  • பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

  பொள்ளாச்சி,

  கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது44). இவர் நகைகள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.

  இவர் அடிக்கடி வேலை விஷயமாக கோவையில் ஒரு தனியார் வங்கிக்கு சென்று வருவார். அப்போது அந்த வங்கியில் வேலை பார்க்கும் வீட்டுக்கடன் மேலாளர் அறிமுகம் ஆனார்.

  அவர், பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற நபரை பிரகாசுக்கு அறிமுகப்படுத்தினார். குட்டி, தன்னை ரியல் எஸ்டேட் மற்றும் பல தொழில் செய்து வருவதாக கூறினார்.

  இந்த நிலையில் சம்பவத்தன்று குட்டி, பிரகாசுக்கு போன் செய்தார். அப்போது தன்னிடம் 2½ கிலோ தங்க நகைகள் இருக்கிறது. அதனை விற்று தந்தால் கமிஷன் தருவதாக கூறினார்.

  இதனை உண்மை என நம்பிய பிரகாசும், நீ யாரிடமோ விற்பதற்கு பதிலாக என்னிடம் கொடுத்தால் நானே வாங்கி கொள்கிறேன். அதற்கான பணத்தையும் தந்து விடுகிறேன் என தெரிவித்தார்.

  அதற்கு குட்டி, நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அங்கு வந்து வாங்கி கொள்கிறீர்களா என கேட்டார். இதையடுத்து பிரகாசும் நகையை வாங்குவதற்காக அதற்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டார்.

  மேலும் தன்னுடன், வங்கி மேலாளர் மற்றும் டிரைவருடன் தனது காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். பொள்ளாச்சி சென்றதும் குட்டிக்காக அவர் சொன்ன இடத்தில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

  நீண்ட நேரம் கழித்து குட்டி ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடன் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்களை போக சொல்லி விட்டு குட்டி மட்டும் இறங்கி கொண்டார்.

  பின்னர் குட்டி, நகை வியாபாரி பிரகாஷ் மற்றும் மேலாளர், டிரைவர் பிரகாசின் டிரைவர் ஆனந்த் ஆகியோருடன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

  அப்போது குட்டியுடன் ஏற்கனவே காரில் வந்த ஆணும், பெணும் அங்கு இருந்தனர். வேறு யாரையாவது பார்க்க வந்திருப்பர் என பிரகாஷ் நினைத்தார்.

  காரை விட்டு இறங்கியதும், குட்டி பிரகாசை பார்த்து நீங்கள் கொண்டு வந்த பணத்தை காட்டுங்கள் என தெரிவித்தார். அவரும் பேக்கில் வைத்திருந்த ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திறந்து காண்பித்தார். நீங்கள் பணத்தை கொடுங்கள் நான் நகையை தருகிறேன் என்றார்.

  அவரும் நம்பி பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.

  இதனால் அதிர்ச்சியான பிரகாஷ் தனது காரில் அவர்களை துரத்தி சென்றார். ஆனால் குட்டி சென்ற கார் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.

  இதையடுத்து பிரகாஷ் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று, நகை இருப்பதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.1.37 கோடியை பறித்து சென்ற குட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

  • தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
  • எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.

  டி.என்.பாளையம், 

  ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மகன் நிஷாந்த் (25), எம்.பி.ஏ. படித்துள்ளார். 

  நிஷாந்தின் அக்கா கார்த்திகாவுக்கு திருமணமாகி சத்தியமங்கலம் தேள்கரடு வீதியில் வசித்து வருகிறார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு நிஷாந்த் சத்தியமங்கலத்தில் உள்ள தனது அக்கா கார்த்திகா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

  இந்நிலையில் நேற்று மாலை கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு  நிஷாந்த் மட்டும் குளிக்க சென்றார். கொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்கால் படித்துறை என்ற இடத்தில் நிஷாந்த் குளித்து கொண்டு இருந்தார்.

  அப்போது எதிர்பாராத விதமாக நிஷாந்த் தண்ணீ ரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.

  இதையடுத்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னர்.

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய நிஷாந்தை தேடினர். இதை தொடர்ந்து நிஷாந்தை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வாலிபர் சிறுமியிடம் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
  • போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  பொள்ளாச்சி,

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

  இவர் 10-ம் வகுப்பில் பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் பாட்டி வீடு பொள்ளாச்சியில் உள்ளது. இதனால் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு வருவார்.

  சிறுமியின் பாட்டி வீட்டின் அருகே வசந்தகுமார் (22) என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அடிக்கடி சிறுமியிடம் சென்று பேசி வந்தார்.

  அப்போது சிறுமியிடம் நான் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

  இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி தனது பாட்டியை பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தார்.

  சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பார்த்த வசந்தகுமார், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். தொடர்ந்து இது போன்று அவர் செய்து வந்துள்ளார்.

  மேலும் கடந்த 12-ந் தேதி சிறுமியை அழைத்து சென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.

  இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை உடும லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி தனக்கு நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார்.

  இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து, பலாத்காரம் செய்த வாலிபர் வசந்தகுமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

  • சிவகுமார் வச்சினம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் பஸ்சில் சென்றார்.
  • பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  மேட்டுப்பாளையம்,

  மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிவகுமார் (42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மேட்டுப்பாளையம் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

  நேற்று வச்சினம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் பஸ்சில் பணியாற்றினார். சிறுமுகை சாலை பிரிவு பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு மண்டி அருகே வந்த போது சாலையின் நடுவே ஒருவர் சென்று கொண்டிருந்தார்.டிரைவர் சிவகுமார் ஹாரன் அடித்தும் ஒதுங்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

  இதனால் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கிச்சென்ற சிவகுமார் அவரிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அந்த நபர் சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் பலமாக தாக்கினார். இதில் டிரைவர் சிவகுமாருக்கு இடது கண்ணின் அருகே காயம் ஏற்பட்டது.

  இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பஸ் டிரைவரை தாக்கியது மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர். புரம், அண்ணாஜி ராவ் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (34) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

  • சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
  • இதயைடுத்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார்.

  கோவை,

  கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சத்யா (வயது 32). இவர்களது வீட்டின் அருகே முருகேசன் (20) என்பவர் வசித்து வருகிறார்.

  சம்பவத்தன்று சத்யாவின் 12 வயது மகள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முருகேசன், சிறுமியிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டு தகராறு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். அவரது தாய் முருகேசனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசி சத்யாவை தாக்கினார். பின்னர் சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

  இது குறித்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

  • நாயை கொன்று படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

  சென்னிமலை:

  சென்னிமலை அருகே செருப்பின் மீது நாய் அசிங்கம் செய்ததால் நாயை கொன்று அதன் படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  முகநூல் பக்கத்தில் கடந்த 9-ந் தேதி இறந்து கிடந்த நாயின் புகைப்படம் ஒன்றை ஒருவர் பதிவிட்டு அதில் "தான் வாங்கி வெச்ச புது செருப்புல அடிக்கடி அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்" என பதிவிட்டு இருந்தார்.

  இதனை பார்த்த ஈரோடு பழையபாளையம், சுத்தானந்தன் நகரில் வசிக்கும் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 25) என்றும்,

  இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கியிருந்து கட்டுமான பணிகளுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

  இதனையடுத்து தலைமறைவாக இருந்த தினேசை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் சென்னிமலை அருகே ஈங்கூர் நால்ரோடு பகுதியில் தினேஷ் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

  பின்னர் உடனடியாக விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.